TamilSaaga

சிங்கப்பூரில் ஊழியர்கள் பற்றாக்குறை.. “அதிகளவு உள்ளூர் ஆட்களை வேலைக்கு எடுங்க” – அமைச்சர் டான் சீ லெங்

சிங்கப்பூர்: தொழிலாளர்கள் பற்றாக்குறை நெருக்கடியை எதிர்கொள்ளும் நிறுவனங்கள், வரவிருக்கும் மாதங்களில் சுமார் 15,000 உள்ளூர் மக்களைப் பணியமர்த்தலாம் என்று அமைச்சர் டான் தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் பெருந்தொற்று காரணமாக முடங்கியிருந்த வேலை வாய்ப்பு சூழல், தற்போது தான் மெல்ல மெல்ல விலகி வருகிறது. சிங்கப்பூரின் எல்லைகள் தற்போது தான் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இன்னமும் சிங்கப்பூர் செல்ல முடியாமல் பல வெளிநாட்டு தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

குறிப்பாக, இந்தியாவில் இருந்து பல ஊழியர்கள் மீண்டும் சிங்கப்பூரில் வேலைக்கு திரும்ப முடியாமல் தடுமாறுகின்றனர். வரும் மாதங்களில் இந்த மோசமான நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் நேற்று (மே.9) மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது.

இதுகுறித்து அவர், “கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளில், நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை அதிகம் தேர்வு செய்து கொள்ளலாம். இந்தத் தொழில்கள் விரைவாக மீண்டு வருவதற்கும் வாய்ப்புகளைப் பெறுவதற்கும் அரசாங்கம் துணை நிற்கும்.

மேலும் படிக்க – சிங்கப்பூர் Cherry Discothequeயில் பரபரப்பு.. அனுமதி மறுக்கப்பட்டதால் மிருகத்தனமாக தாக்கிய கும்பல்.. போலீசார் தீவிர விசாரணை – வைரலாகும் வீடியோ!

“எனினும், வெளிநாட்டுத் தொழிலாளர்களை அதிகமாக நம்பியிருப்பது வணிகங்களுக்கு ஒருவகையில் நன்மை என்றாலும், சில இடையூறுகளுக்கு ஆளாக நேரிடும். எனவே, மனிதவள பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிறுவனங்கள், கிடைக்கக்கூடிய அனைத்து ஆதரவையும் பயன்படுத்தி, உள்ளூரில் இருந்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.” என்று அமைச்சர் டான் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு உள்ளூர் வேலைவாய்ப்பு 71,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், உள்ளூர் மக்களுக்கான வேலையின்மை விகிதம் நோய்த்தொற்றுக்கு முந்தைய நிலைக்கு மீண்டுள்ளதாகவும் டாக்டர் டான் கூறினார்.

அதேசமயம், தகவல் தொடர்பு மற்றும் நிதிச் சேவைகள் போன்ற தொழில்களில் பல பணியிடங்கள் தொடர்ந்து காலியாக உள்ளதும் இங்கு கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

மேலும் படிக்க – சிங்கப்பூர் Construction நிறுவனத்தில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு.. Civil Engineering முடித்த இளைஞர்கள் அதிக அளவில் தேவை – உடனே Apply செய்யலாம்

தொடர்ந்து பேசிய அமைச்சர் டான், “கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து அரசாங்கம் படிப்படியாக எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்கிய பின்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வேகமாக வளரத் தொடங்கியுள்ளது.

மே 1 ஆம் தேதி முதல், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட Work Permit பெற்றவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் நாட்டிற்குள் நுழைய நுழைவு அனுமதி தேவையில்லை என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts