TamilSaaga

சிங்கப்பூரில் கல்ர்ஃபுல் மின்விளக்குகளால் விழிப்புணர்வு… ஆண்டுதோறும் தொடரும் என பிரதமர் அறிவிப்பு

போதைப் பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான நாளினை உலகம் முழுதும் நேற்று அனுசரித்தது.

சிங்கப்பூரின் போதை பொருள் ஒழிப்பு பிரிவானது கடந்த 49 ஆண்டுகளாக தனது பணியை சிறப்பாக செய்து வந்துள்ளது. தற்போது இந்தாண்டு அதன் 50வது ஆண்டு நிறைவு. இது போதை பொருள் தடுப்பில் ஒரு மைல்கல்லாக மாறியுள்ளது.

இந்த தினத்தை ஒட்டியே நேற்று (ஜீன்.26) Marina Bay Sands மற்றும் Esplanade ஆகிய கட்டிடங்களில் பச்சை மற்றும் வெள்ளை நிற மின் விளக்குகளை கொண்டு ஒளியூட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இது மட்டுமல்லாமல் போதை பொருட்களை தடுப்பது அதன் அவசியம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி இளைஞர்களை பெருமளவில் இந்த செயல்களில் ஈடுபடுத்தி விழிப்புணர்வு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

இதை பற்றி சிங்கப்பூர் பிரதமர் திரு.லீ சியோன் லூங் “போதை பொருள் பழக்கமானது தனிநபருக்கு அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் இந்த சமூகத்துக்கும் பெரிய பாதிப்பையும் இழப்பையும் தரக்கூடியது” என்றும் ஆண்டுதோறும் இந்த வண்ண மின்விளக்குகள் மூலம் ஒளியூட்டப்பட்டு ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு தொடரும் என்றும் கூறினார்.

Related posts