சிங்கப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 7) ஒரு வாகன நிறுத்துமிடத்தில் நின்ற கார் மீது மோதியதில் வாடகைக்கு எடுக்கப்பட்ட அந்த கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் அந்த காரின் ஓட்டுநர் தீயில் சிக்கி பரிதாபமாக இறந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூர் கெயிலாங் காவல் நிலையத்திற்கு அடுத்துள்ள பிளாக் 42 காசியா கிரசென்ட்டில் உள்ள திறந்த வெளி வாகன நிறுத்துமிடத்தில் இந்த விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து நடந்த பகுதியில் வசிக்கும் பெண்மணி ஒருவர் அளித்த தகவலின்படி, பிற்பகல் 3 மணியளவில் தான் வீட்டில் இருந்தபோது காற்றில் வெள்ளை புகை அதிகரித்ததை முதலில் கவனித்ததாக கூறினார். உடனடியாக அவரும் அவரது கணவரும் கீழே இறங்கியபோது, அங்கு அவர்கள் ஒரு வெள்ளை நிற Mazda 3 கார் ஒன்று ஏற்கனவே அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதியதைக் கண்டார்கள். காரின் பானட் நசுங்கி இருந்தது என்றும் மற்றும் அதன் கேபின் புகையால் நிரம்பியிருந்தது என்றும் அவர் கூறினார். ஆனால் அவர் கண்ட அந்த நேரத்தில் அந்த எரிய தொடங்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
ஆரம்பத்தில், காரில் உள்ளே யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை, எனவே நாங்கள் தொடர்ந்து ஜன்னலைத் தட்டினோம். காருக்குள் யாரோ அசையும் சத்தம் கேட்டபோதுதான், இன்னும் யாரோ உள்ளே இருப்பதை உணர்ந்தோம் நாங்கள் உணர்ந்தோம் என்றார் அந்த சம்பவத்தை நேரில் பார்த்த பெண்மணி. அதிர்ச்சியடைந்த அவர், அண்டை வீட்டாரின் உதவியை பெற மாடிக்கு ஓடியுள்ளார், அதே நேரத்தில் அவரது கணவரை போலீசாருக்கு போன் செய்யுமாறும் கேட்டுள்ளார். அந்த பிளாக்கில் வசித்து வந்த டான் என்பவர் “எனது அண்டை வீட்டார் உதவிக்கு அழைத்தனர், மேலும் தீயை அணைக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பும்படி என்னிடம் கேட்டார்கள்” என்றார். அந்த நேரத்தில் தான் அந்த வெடிக்கும் சத்தம் கேட்டது என்றார் அவர்.
அந்த இடத்திற்கு வந்த போலீசார் அந்த காருக்குள் சிக்கியிருந்த நபரை வெளியே இழுக்க முயற்சித்தனர் இருப்பினும் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை. சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக எரிந்துகொண்டிருந்த தீயை தீயணைப்பு படை வீரர்கள் அணைத்தனர். SCDF அதிகாரிகள் வந்த சோதித்தபோது அந்த காருக்குள் சிக்கியிருந்த ஓட்டுநர் மரணமடைந்துவிட்டதாக அறிவித்தனர். 30 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் இறப்பு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.