TamilSaaga

என்னய்யா இது கலர் கலரா இருக்கு… சிங்கையில் ஊழியர்களுக்கு அலர்ட் கொடுக்கும் Accesscode… வீட்டில் இருந்து தெரிந்து கொள்ள வொர்க் பெர்மிட் போதும்

MOM வழங்கிய சிங்கப்பூர் வொர்க் பெர்மிட்கள், long term visas and special passes வேலிடிட்டியை சரிபார்க்கவும் பயன்படுவது தான் SGWorkPass App. வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்குச் செல்ல முடியுமா என்பதை கம்பெனி நிர்வாகமும், ஊழியர்களும் தெரிந்து கொள்ள AccessCodeஐச் சரிபார்க்கலாம். வொர்க் பெர்மிட் பெற்றவர்கள் மற்றும் MDW க்கள் தங்கள் சம்பளத் தகவலைப் பார்க்கவும் இது உதவுகிறது.

SGWorkPass ஆனது Google Play Store, App Store மற்றும் Huawei AppGallery ஆகியவற்றில் கிடைக்கிறது. இது முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.

ஊழியரின் புகைப்படம், பெயர், FIN, பாஸ் Type, பாஸ் validity date, AccessCode, Dormitoryல் தங்கி இருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கி இருக்கும் இடங்கள் ஆகியவை குறித்து இதில் தகவல்கள் இடம் பெற்று இருக்கும். 29 ஜனவரி 2021 முதல், Work Permit வைத்திருப்பவர்கள் (MDWs உட்பட) தங்களின் சம்பளத் தகவலைப் பார்க்கலாம்.
ஊழியர்கள் தாங்கள் தங்கி இருக்கும் இடத்தினை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்களா என்பதை AccessCodeஐ வைத்து தெரிந்து கொள்ளலாம்.

சிகப்பு கலர் வந்து Place of stay என அதில் குறிப்பிட்டால் நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட வீட்டில் தங்கவில்லை என்பது அர்த்தம். கருப்பு கலர் வந்து Place of stay என அதில் குறிப்பிட்டால் AccessCode நிலையைத் தீர்மானிக்க தங்கியிருக்கும் இடத்தைப் பயன்படுத்த முடியாது. சிகப்பு கலர் இருந்து COVID-19 infection என AccessCode காட்டினால் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், நீங்கள் குடியிருப்பை விட்டு வெளியேறவோ அல்லது வேலைக்குச் செல்லவோ உங்களுக்கு அனுமதி இல்லை.

ART பாசிட்டிவ் வந்த 72 மணிநேரத்திற்குப் பிறகு ART சோதனை செய்து நெகட்டிவ் வர வேண்டும். கோவிட்-19 recovery protocol கம்ப்ளீட் செய்திருக்க வேண்டும். இதில் ஒன்றை பூர்த்தி செய்யும் பட்சத்தில், AccessCode பச்சையாக மாறிவிடும். சிகப்பு என வந்து Approved to start work – No எனக் குறிப்பிட்டு இருந்தால் உங்கள் நிறுவனம் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை என அர்த்தம்.

உங்களால் வொர்க் பெர்மிட்டில் QR குறியீடு இல்லை என்றாலோ, ஸ்கேன் செய்ய முடியாவிட்டாலோ FINஐ உள்ளிடவும். மேலும் சம்பளம் குறித்த முழு விவரங்களும் இதில் தெரிந்து கொள்ள முடியும். SGWorkPassல் QR ஸ்கேன் செய்து My Employment Info பக்கத்தில் singpass வைத்து லாகின் செய்தால் தெரிந்து கொள்ளமுடியும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts