TamilSaaga

“லிட்டில் இந்தியாவில் வீராசாமி சாலை” : சிங்கப்பூரின் வரலாற்றில் இடம்பிடித்த தமிழர் டாக்டர் என். வீராசாமி

சிங்கப்பூரின் மத்திய பகுதியில் HDB எஸ்டேட் அருகே அமைந்துள்ளது தான் சிங்கப்பூர் வீராசாமி சாலை. ஆரம்ப காலங்களில் அந்த பகுதியில் வெகுசில மருத்துவர்களே இருந்து வந்துள்ளனர். அப்படி அந்த பகுதியில் இருந்த வெகு சில மருத்துவர்களும் பெரும்பாலும் ஐரோப்பியர்கள் தான். இந்நிலையில் அந்த பகுதியில் முதன் முதலில் உரிமம் பெற்ற உள்ளூர் இந்திய மருத்துவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நமது டாக்டர் என்.வீராசாமி. தற்போதைய சிங்கப்பூரின் ரோச்சோர் சாலையில் தான் அப்போது அவருடைய மருத்தகம் செயல்பட்டு வந்தது.

அப்போது தான் சிங்கப்பூர், தமிழர்களுக்கு வேலை செய்யும் இடமாக மட்டும் இல்லாமல் வாழ்விடமாகவும் மாறத்தொடங்கியது. அதற்கு சான்றுபகரும் விதமாகத்தான் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள அந்த பகுதிக்கு வீராசாமி ரோடு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. டாக்டர் வீரசாமியின் நினைவாக கடந்த 1927ம் ஆண்டு அந்த சாலைக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்த பெயர் வைப்பதற்கு முன்னதாக அந்த சாலை ஜாலான் தம்பா என அழைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

அதேபோல முதன் முதலில் சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் தமிழில் பெயர் சுடப்பட்ட இரண்டு சாலைகள் வீராசாமி சாலை மற்றும் மற்றும் அதனருகில் 1 கிலோமீட்டர் தொலைவில் இல்ல சந்தர் சாலை ஆகியவை மட்டுமே. கடந்த 1864ம் ஆண்டு தான் வீராசாமி சிங்கப்பூரில் பிறந்தார். அவர் மிக சிறந்த மருத்துவராக திகழ்ந்த நிலையில் அந்த சாலைக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுபோல பல தமிழர்கள் இன்றளவும் சிங்கப்பூருக்கு பெருமை தேடித்தந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல தமிழர்களுக்கு நமது சிங்கப்பூர் இரண்டாம் தாய் வீடாக உள்ளது என்றால் அது சற்றும் மிகையல்ல என்பதும் பலரும் அறிந்ததே.

Related posts