TamilSaaga

“World Class”.. தரம்… அதிகாரிகள் சொல்ல சொல்ல.. சிங்கப்பூர் General Hospital-ல் உள்ள வசதிகளை பார்த்து வியந்த தமிழக அமைச்சர்!

சிங்கப்பூரில் நடைபெறும் World one Health congress மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிங்கப்பூரின் General Hospital-ல் உள்ள வசதிகளை பார்த்து ஒரு நொடி திகைத்து போய்விட்டார் என்றே சொல்லே வேண்டும்.

இந்தியாவில் பொதுவாக அரசு மருத்துவமனை என்பது, சற்று சுகாதாரமற்ற நிலையில் தான் இருக்கும். அதுபோல், சில மருத்துவமனைகளில் நவீன சாதனங்கள் கூட இருப்பதில்லை. இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம் இதில் சற்று முன்னேறி இருந்தாலும், இன்னும் அரசு மருத்துவமனைகளின் தரம் என்பது மக்களுக்கு ஏற்ற வகையில் இல்லை.

அதிக அளவிலான மக்கள் தொகை இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டாலும், அரசோ அதிகாரிகளோ நினைத்தால், இப்போது இருப்பதை விட சிறந்த தரத்தை உருவாக்கி கொடுக்க முடியும். தஞ்சை அரசு மருத்துவமனையில் இருந்த அவல நிலையை பார்த்த நடிகை ஜோதிகா, கோவிலுக்கு நாம் செய்யும் செலவுகளை மருத்துவமனைகளுக்கு செய்யலாம் என்று கருத்து கூறியது பெரும் சர்ச்சையானது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க – கிறிஸ்துமஸ் அன்று லவ் புரபோஸ்.. தந்தையின் எச்சரிக்கையை மீறி காதலியை முதன் முறையாக பைக்கில் அழைத்துச் சென்ற சிங்கப்பூர் இளைஞருக்கு நேர்ந்த துயரம் – காதலி ICU-வில்!

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிங்கப்பூரில் நடைபெறும் World one Health congress மாநாட்டில் கலந்து கொள்ள இங்கு வந்துள்ளார். இந்த சூழலில், நேற்று (நவ.8) அவர் Singapore General hospital லில் மருத்துவ சம்பந்தமான விஷயங்களை பார்வையிட்டார். இங்குள்ள வசதிகள், மருத்துவமனையின் தரம், அளிக்கப்படும் சிகிச்சை குறித்த தகவல்கள் உட்பட அனைத்தையும் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டார். அதுமட்டுமின்றி, இங்கு அளிக்கப்படும் உயர்தர சிகிச்சை குறித்து அதிகாரிகள் எடுத்து சொன்ன போது, அவர் வியந்து பாராட்டினார்.

கூடிய விரைவில், தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏதேனும் மாற்றம் வருகிறதா என்று பார்க்கலாம்!.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts