TamilSaaga

சம்ஜா… டாப் ஏர்லைன்ஸை கிழித்து தொங்கவிட்ட பிரபல பாடகர் பென்னி தயாள்… ஏனுங்க என்ன சேதி இம்புட்டு கோவமா இருக்கீங்க?

இசைக் கலைஞர்கள் தங்கள் பயணத்தின்போது உடன் எடுத்துவரும் இசைக்கருவிகளை விமான நிறுவனங்கள் சரியாகக் கையாள்வதில்லை என்று தனது கோபத்தைப் பாடகரும் இசைக் கலைஞருமான பென்னி தயாள் கொஞ்சம் காட்டமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.

பென்னி தயாள்

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பாடகரும் இசைக் கலைஞருமான பென்னி தயாள். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பள்ளிக் கல்வியை முடித்து, தமிழ்நாட்டின் சென்னையில் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தவர். S5 என்கிற பேண்டில் பயணித்த அவர், 2016-ல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடகரானார். இதுவரை, இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 19 மொழிகளில் 3,500 பாடல்களுக்கும் மேல் பாடியிருக்கிறார். அவ்வப்போது வெளிநாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரியும் நடத்தி வருகிறார்.

அப்படி வெளிநாடுகளுக்குச் செல்கையில் உடன் எடுத்துச் செல்லும் இசைக் கருவிகளை விமான நிறுவன ஊழியர்கள் சரியாகக் கையாள்வதில்லை என்று அவர் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் விஸ்தாரா, ஏர் இந்தியா, இண்டிகோ, ஏர் ஏசியா, ஸ்பைஸ் ஜெட், ஆகாஷா ஏர் உள்ளிட்ட நிறுவனங்களை டேக் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில், `அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இசைக் கலைஞர்கள் அனைவரும் பணம் சம்பாதிக்கக் கடுமையாக உழைக்கிறார்கள். அப்படியான அவர்களின் சம்பாதியத்துக்கு வித்திடும் இசைக்கருவிகளை நீங்கள் எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் அது அமையும்.

ஒவ்வொரு முறையும் இசைக் கலைஞர்கள் கான்செர்ட், இசை நிகழ்ச்சிகளுக்காக இந்தியாவுக்குள்ளும் இந்தியாவுக்கு வெளியேயும் விமானங்களில் பயணிக்கிறார்கள். அப்படி பயணிக்கும்போது அவர்களுடன் எடுத்து வரும் இசைக் கருவிகளை எந்தவொரு விமான நிறுவனமும் குறைந்தபட்ச அக்கறையோடு கூட பராமரிப்பதில்லை. ஏற்கனவே இதைப் பல்வேறு இசைக்கலைஞர்களும் பகிர்ந்திருக்கிறார்கள். அதை நானும் ஷேர் செய்திருக்கிறேன்.

இதுபோன்ற ஒரு சம்பவம் எனகு நேரடியாகவே நடந்திருக்கிறது. விஸ்தாரா விமானத்தில் பயணிக்கையில் என்னுடைய இசைக் கருவிகள் மோசமாக சேதமடைந்தன. இரண்டு பைகளில் நான் கொண்டு சென்ற அந்தக் கருவிகள் சேதமடைந்த நிலையில் 7 நாட்களுக்குப் பிறகே எனக்குக் கிடைத்தது. விஸ்தாராவின் பயணிகள் சேவை மிக மிக மோசமாக இருக்கிறது. சம்ஜா… புரிந்ததா’ என்று வீடியோவில் தனது வேதனையை பென்னி தயாள் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அந்த வீடியோவை காண இந்த லிங்க்கினை க்ளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts