TamilSaaga

“கொடுத்து வைத்த சிங்கப்பூர் மக்கள்”.. 166,300 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை காப்பாற்றிய கோவிட்-19 ஆதரவு நடவடிக்கைகள் – நிதித்துறை அமைச்சகம் “சபாஷ்” அறிவிப்பு

2020 முதல் கடந்த ஆண்டு வரையிலான எட்டு பட்ஜெட்டுகள், கோவிட்-19 இன் தாக்கத்தைத் தணிக்க, சிங்கப்பூரின் வளர்ச்சியை கணிசமாக உயர்த்தி, கடந்த இரண்டு ஆண்டுகளில் சிங்கப்பூரர்களின் வேலையின்மையைக் குறைத்துள்ளன என்று சிங்கப்பூர் அரசு இன்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, பல புள்ளி விவரங்களையும் வெளியிட்டுள்ளது.

நாளை (பிப்.18) சிங்கப்பூரில் 2022க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில், பட்ஜெட் அறிக்கைக்கு ஒரு நாள் முன்னதாக, இன்று (பிப்ரவரி 17) அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கப்பூரின் நிதி நடவடிக்கைகள் மற்றும் பணவியல் கொள்கைகள் ஆகியவை, சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ஏற்படுத்திய விளைவுகளின் விவரங்களை நிதி அமைச்சகம் (MOF) வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டு பொருளாதாரம் 7.6 சதவீதம் வளர்ச்சி கண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் அரசின் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் இது 6.8 சதவீதமாக இருந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. (அடேங்கப்பா!)

2020 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1 சதவீத வீழ்ச்சியைக் கண்டது. இந்த ஆதரவு திட்டங்கள் இல்லாவிட்டால் அது 10.7 சதவீதமாக இருந்திருக்குமாம்.

அதுமட்டுமின்றி, அரசின் கொள்கை ஆதரவு இல்லாதிருந்தால் சிங்கப்பூரர்கள் வேலையின்மை 2020 இல் 6.1 சதவீதத்தை எட்டியிருக்கும் என்றும், கடந்த ஆண்டு 7.5 சதவீதத்தை எட்டியிருக்கும் என்றும் அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.

ஆனால், அரசின் ஆதரவு காரணமாக, சிங்கப்பூரர்கள் வேலையின்மை 2020 இல் 4.1 சதவீதமாகவும், கடந்த ஆண்டு 3.5 சதவீதமாகவும் வேலையின்மை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வேலையின்மை விகிதங்களை சமாளிக்க முக்கிய காரணிகளாக Jobs Support Scheme (JSS) மற்றும் Jobs Growth Incentive மற்றும் பிற நிதி மற்றும் பண நடவடிக்கைகள் போன்றவை அமைந்ததாகவும் அரசு கூறியுள்ளது.

மேலும் படிக்க – சிங்கப்பூர்.. கருணைக்கொலை செய்யப்படுகிறதா காட்டுபன்றிகள்? : உண்மையில் நாம் செய்யவேண்டியது என்ன?

“அதிகமான உள்ளூர் தொழிலாளர்கள் வேலையில் இருப்பதால், இந்த நடவடிக்கைகள் மனித உழைப்பின் இழப்பைத் தணித்தது. நெருக்கடியின் மூலம் அதிகமான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவியது” என்று MOF கூறியது.

விமானப் போக்குவரத்து, சுற்றுலா, உணவு மற்றும் குளிர்பானம் போன்ற கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளத்திற்கு மானியம் அளிக்கும் JSS போன்ற குறிப்பிட்ட ஆதரவுத் திட்டங்களின் தாக்கத்தையும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2020 முதல் கடந்த ஆண்டு டிசம்பர் வரை $28 பில்லியன் JSS payouts, கொரோனா தொற்று ஏற்பட்ட முதல் 10 மாதங்களில் 165,000 சிங்கப்பூரர்களின் வேலையை காப்பாற்றியுள்ளது என்றும் MOF குறிப்பிட்டுள்ளது.

இது ஊதியக் குறைப்புகளுக்கு எதிரான ஒரு இடையகமாகவும் செயல்பட்டது, மானியங்களில் ஒவ்வொரு 10 சதவிகிதப் புள்ளி அதிகரிப்பும், 1.7 சதவிகிதம் முதல் 5.3 சதவிகிதம் என்ற உயர் சராசரி உள்ளூர் ஊதியமாக மொழிபெயர்க்கப்பட்டது. இது $70 முதல் $150 வரை வேலை செய்கிறது.

இதற்கிடையில், SGUnited Jobs and Skills தொகுப்பு ஆகியவை traineeship வாய்ப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கும் பணிகளை மேற்கொண்டது.

மேலும் படிக்க – “இரண்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து” : மார்ச் 1 வரை தடை நீடிக்கும் – சேவை தடைபட காரணம் என்ன?

இவை கடந்த ஆண்டு அக்டோபர் இறுதிக்குள், 166,300 க்கும் மேற்பட்ட வேலைகள் மற்றும் திறன் வாய்ப்புகளை நிரப்பியுள்ளன. இதில் 122,300 பேருக்கான வேலை வாய்ப்புகளும் அடங்கும்.

இருப்பினும், பல்வேறு திட்டங்களில் வேலைவாய்ப்பு கலவையாக இருந்தது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் பயிற்சி மற்றும் இடைக்கால நிறுவன இணைப்பு திட்டங்களில் (mid-career company attachment programmes)பணியமர்த்தப்பட்டனர்.

அதேசமயம், நிறுவனத்தின் பயிற்சித் திட்டத்தில் இருந்த நபர்களில் பலர், நிகழ்ச்சி முடிந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு வேலையில்லாமல் இருந்தனர்.

தற்காலிக பிரிட்ஜிங் கடன் திட்டம், நிறுவன நிதியளிப்புத் திட்டம்-வேலை மூலதனக் கடன் மற்றும் நிறுவன நிதியளிப்புத் திட்டம்-வர்த்தகக் கடன் ஆகியவை மூன்று நிதித் திட்டங்களாகும். இவை கடந்த ஆண்டு மார்ச் 2020 முதல் டிசம்பர் வரையில் $24.7 பில்லியனுக்கும் அதிகமான கடனைப் பெற 27,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு ஆதரவளித்துள்ளன.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts