TamilSaaga

‘1200 கோடி ரூபாய் திட்டம்’ – முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சிங்கப்பூர் CapitaLand நிறுவனம் கையெழுத்திட்டது.

சிங்கப்பூரின் சொத்துச் சந்தை நிறுவனமான Capitaland நிறுவனம் இந்தியாவின் தளவாட துறையில் முதலீடு செய்ய சுமார் 400 மில்லியன் மதிப்புள்ள தனியார் முதலீட்டு நிதியை தொடங்கியுள்ளது. அந்த நிறுவனம் இந்திய தளவாட துறையில் தொடங்கியிருக்கும் இரண்டாவது முதலீட்டு நிதி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, மும்பை, பெங்களூர், புனே, இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய ஆறு பெருநகரங்களிலும்.

கோயம்புத்தூர், கொல்கத்தா. ஜெய்ப்பூர் போன்ற வளர்ந்துவரும் நகரங்களிலும் உற்பத்தி மையங்களை அமைப்பதில் நிதிகளை முதலீடு செய்யும் Capitaland, இந்தியா தளவாட துறை முதலீட்டு நிதியில் சொத்துக்களை Ascendas Firstspace நிறுவனம் நிர்வகிக்கும்.

ஏற்கனவே இந்தியாவில் முதலீடு செய்துள்ள Capitaland நிறுவனத்தின் நிதியையும் Ascendas Firstspace நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் தென்னரசு முன்னிலையில் சென்னையில் அமையவுள்ள 1200 கோடிமதிப்புள்ள டேட்டா மைய திட்டம் குறித்த ஆவணத்தில் Capitaland நிறுவனம் கையெழுத்திட்டது.

இந்த தகவலை இந்தியாவில் உள்ள சிங்கப்பூர் நாட்டின் தூதரகத்தின் உயர் கமிஷனர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

Related posts