சிங்கப்பூரில் கடந்த பந்தாண்டில் வேளைக்கு செல்லும் மனைவியர்களை கொண்ட குடும்பங்கள் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இது நாட்டில் கல்வி வளர்ச்சியையும் குறிக்கின்றது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு குடும்பங்களிலும் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் சரிசமமாக கல்வி தகுதியோடு இருப்பதையும் இந்த தரவுகள் காட்டுவதாகவும் உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு வேலை செய்யும் மனைவிகள் மற்றும் கணவர்கள் உள்ள குடும்பங்களின் விகிதம் 52.9 சதவிகிதத்தில் இருந்து 60 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
அதேபோல கணவர்கள் மட்டும் வேலைசெய்யும் குடும்பங்களின் விகிதம் கடந்த 2010ம் ஆண்டு 32.6ஆக இருந்த நிலையில் தற்போது 24.95 சதவிகிதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அதிகரிப்பானது குறிப்பாக 35 முதல் 49 வயது வரையிலான வயதினரிடம் உள்ளது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
மேலும் வேலை பார்க்கும் திருமணமான தம்பதியினரின் மாத வருவாய் சுமார் 9,000 டாலர் என்று அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த அதிகரிப்பு கடந்த 10 ஆண்டுகளில் 29.9 சதவிகிதத்தில் இருந்து 48 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.