சிங்கப்பூரில் ஒரு தம்பதியினர் தங்களுடைய GrabFood ஆர்டரில் சிக்கன் கட்லெட் ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் வந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, அதில் அழகழகாக கட்லெட் இருந்துள்ளது ஆனால் அதில் சிக்கன் தான் இல்லை.
நேற்று வியாழக்கிழமை (மே 26) பிளாக் 684 ஹூகாங் அவென்யூ 8ல் உள்ள ஹெங் ஹெங் வெஸ்டர்ன் ஃபுட் நிறுவனத்திடமிருந்து இந்த உணவு ஆர்டர் செய்யப்பட்டது என்று அந்த தம்பதி கூறியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய அந்த தம்பதி “எங்கள் ஆர்டரில் பெரும் ஏமாற்றம், நாங்கள் இரண்டு செட் மீன் மற்றும் சிப்ஸ் ஆர்டர் செய்தேன் ஆனால் ஒன்று தான் வந்தது.
அதேபோல சிக்கன் கட்லெட் மிகவும் மெல்லியதாக இருந்தது, இன்னும் சொல்லப்போனால் அதில் சிக்கனை விட மாவு தான் அதிகம் இருந்தது என்பர் தான் கூறவேண்டும். உண்மையில் நாங்கள் கொடுத்த காசு ஒர்தானா சாப்பாடு அது இல்லை என்று தான் கூறவேண்டும்.
நாட்டில் சிக்கன் தட்டுப்பாடு இருக்கின்றது என்பதை நாங்கள் அறிவோம், அதற்காக இப்படியா என்று வருத்தப்படுகின்றனர் அந்த தம்பதியினர்.
வரும் ஜூன் 1 முதல் உள்நாட்டு விலை மற்றும் உற்பத்தி சீராகும் வரை மாதம் 3.6 மில்லியன் கோழிகள் ஏற்றுமதி செய்யப்படுவதை நிறுத்துவதாக திங்கள்கிழமை (மே 23) அன்று மலேசியா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.