TamilSaaga

சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான DBS சேவை முடங்கியது… பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் வாடிக்கையாளர்கள் திண்டாட்டம்!

சிங்கப்பூர்: டிபிஎஸ் டிஜிட்டல் சேவைகள் புதன்கிழமை (மார்ச் 29) பல மணிநேரம் பாதிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் PayLah போன்ற ஆன்லைன் வங்கி தளங்களில் கூட லாகின் பண்ண முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

டவுன்டெக்டர் என்ற இணையதளத்தின்படி, சேவை செயலிழப்புகள் பற்றிய தகவல்கள் காலை 8.30 மணியளவில் இருந்து தொடங்கி இருக்கிறது. மாலை 4.50 மணியை தாண்டிய நிலையிலும், DBS தனது டிஜிட்டல் சேவைகளுக்கான access இன்னும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அனைத்து டிபிஎஸ் மற்றும் பிஓஎஸ்பி கிளைகளிலும், Treasures Centre அனைத்துமே, இந்த சிக்கலைத் தீர்க்கும் வகையில் செயல்படும் போது, இது சரியாக இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டு DBS பேஸ்புக் பதிவு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது.

இதையும் படிங்க: மாதம் 9 லட்சம் சம்பளமும் வேண்டாம்.. குடியுரிமையும் வேண்டாம்… சிங்கப்பூரில் சொர்க்கமாய் கிடைத்த வாழ்க்கையை தூக்கியெறிந்து விட்டு சொந்த ஊரில் ஆடு, மாடு மேய்க்கும் தம்பதி…!

வாடிக்கையாளர்கள் தங்கள் DBS/POSB கார்டுகளை பரிவர்த்தனைகளுக்கு தொடர்ந்து பயன்படுத்தலாம். உங்கள் டெபாசிட்களும் பணமும் பாதுகாப்பாக உள்ளன என்பதை உறுதி அளிக்கிறோம். சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியானது, DBS Vickers mTrading மற்றும் DBS PayLah போன்ற டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்தலாம். ஆனால் லாகின் சமயத்தில் ஸ்லோவாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து பலர் இண்டர்நெட் பேக்கிங்கினை பயன்படுத்த முனைந்த போது ஒருவருக்குமே otp வரவில்லை எனக் கூறப்படுகிறது. பலர் அவசர பரிவர்த்தனைகளுக்கு உடனே இந்த சிக்கலை தீர்க்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சிங்கப்பூரின் மிகப்பெரிய சினிமா தியேட்டர்… இலவசமாக சினிமா பார்க்கலாம்… உடனே முந்துங்கள் அனுமதி இலவசம் தான்!

மார்ச் 29, 2023 Downdetector என்ற இணையதளத்தில் DBS செயலிழப்புகள் பதிவாகி இருக்கிறது. இதற்கு முன்னர் DBSன் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் நவம்பர் 2021ல் இரண்டு நாள் இடையூறுகளைச் சந்தித்தன.இருந்தும் வங்கியில் இருக்கும் பணத்திற்கும் பாதுகாப்பு பொருள்களும் சரியாக இருப்பதாக கூறப்படுகிறது. அது சைபர் தாக்குதலுக்கு இலக்காகவில்லை என்றும் கூறியது. சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) இந்த சிக்கலை ஒரு “தீவிரமான இடையூறு” எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts