TamilSaaga

உங்க சிங்கப்பூர் “Driving License”-ஐ 3 வருஷமா Renewal பண்ணலையா? இந்தியாவில் இருந்துகொண்டே புதுப்பிக்க முடியுமா? – சிங்கப்பூரில் இருந்து Live Report

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களில் பலர் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கின்றனர். அதில் சிலருக்கு சிங்கப்பூர் டிரைவிங் லைசன்ஸை, தனது சொந்த ஊரில் இருந்து கொண்டே.. அதாவது தமிழகத்தில் தனது ஊரில் இருந்து கொன்டே, ஆன்லைன் மூலம் புதுப்பிக்க முடியுமா என்ற கேள்வியை நம்மிடம் முன்வைத்தனர்.

ஆனால், அப்படி ஆன்லைனில் சிங்கப்பூர் டிரைவிங் லைசன்ஸை புதுப்பிக்க முடியாது. சிங்கப்பூரை பொறுத்தவரை ஓட்டுநர் உரிமம் என்பது வெளிநாடுகளில் இருந்து இங்கு வருபவர்களுடைய விசாவை பொறுத்தே வழங்கப்படுகிறது. ஆகையால் அந்த விசா உள்ள காலத்தில் மட்டுமே அவர் சிங்கப்பூர் வந்து தேவையான ஆவணங்களை வழங்கி ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க முடியுமே தவிர, இந்தியாவில் இருந்துகொண்டே அவர்களால் Renewal செய்ய முடியாது .

சிங்கப்பூர் சட்டதிட்டங்களை பொறுத்தவரை செல்லுபடியாகும் விசா உள்ளவர்கள் மட்டுமே இங்கு வந்து புதுப்பிக்க முடியும். மேலும் இந்த புதுப்பித்தலும் சில வருடங்களுக்கு மட்டுமே சாத்தியம். அந்த கால அளவை தாண்டும்போது அவர்கள் புதுப்பித்தலும் நிறுத்தப்படும்.

அதாவது, மூன்று வருடங்களுக்கு மேல் நீங்கள் டிரைவிங் லைசன்ஸை புதுப்பிக்கவில்லை எனில், நீங்கள் தலைகீழாக நின்று வாதிட்டாலும் Renewal செய்ய முடியாது. நீங்கள் மீண்டும், டிரைவிங் லைசன்ஸுக்கான தேர்வை எழுத வேண்டும். “Practical Driving Test” உட்பட முழு டிரைவிங் டெஸ்ட்டையும் மீண்டும் முடிக்க வேண்டும்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் வேலைக்கு வர முயற்சி பண்றீங்களா? ஜஸ்ட் 4 மாதம் வெயிட் பண்ணுங்க.. இந்த Pass-ல் $5000 முதல் சம்பளம் – ஊதிய உயர்வுடன் அமலாகும் புதிய விதிமுறை!

சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் எதனை எப்படி புதுப்பிக்க வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.

புதுப்பித்தலுக்கான தகுதி (Renewal Eligibility): முதலில், உங்கள் உரிமத்தைப் புதுப்பிக்க நீங்கள் தகுதியுள்ளவரா என்பதைச் சரிபார்க்க வேண்டும். உங்கள் உரிமம் 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலாவதியாகாமல் இருந்தால், சிங்கப்பூரில் சரியான குடியிருப்பு முகவரி இருந்தால் ஆன்லைனில் புதுப்பிக்கலாம்.

சிங்கப்பூரில் உங்கள் ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க, நீங்கள் 3 ஓட்டுநர் மையங்களில் ஏதேனும் ஒன்றில் Appointment பெற வேண்டும். சிங்கப்பூர் காவல்துறை இணையதளம் அல்லது போக்குவரத்து காவல்துறை இணையதளம் மூலம் ஆன்லைனில் இதைச் செய்யலாம்.

உங்கள் Appointment-க்கு செல்லும்போது, உங்களின் NRIC அல்லது FIN அட்டை, உங்களின் தற்போதைய ஓட்டுநர் உரிமம் மற்றும் IDA-விற்காக பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டுச் செல்லுங்கள்

உங்கள் வயது மற்றும் ஓட்டுநர் அனுபவத்தைப் பொறுத்து, நீங்கள் பார்வைத் தேர்வு, டிரைவிங் தியரி டெஸ்ட் அல்லது Practical டிரைவிங் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியிருக்கும்.

புதுப்பிக்கப்பட்ட உரிமத்தின் காலத்தைப் பொறுத்து புதுப்பித்தல் கட்டணம் மாறுபடும். நீங்கள் ஓட்டுநர் மையத்தில் அல்லது சிங்கப்பூர் காவல்துறை இணையதளம் அல்லது போக்குவரத்து காவல்துறை இணையதளம் மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம்.

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts