TamilSaaga

“நேற்று முதல் சிங்கப்பூரில் தொடங்கிய புதிய VTL சேவை” : இரு நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 250 பேர்

சிங்கப்பூரில் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான விரிவாக்கப்பட்ட தனிமைப்படுத்தப்படாத பயணத் திட்டத்தின் கீழ் நேற்று அக்டோபர் 19 முதல் 8 புதிய நாடுகளில் இருந்து மக்களை சிங்கப்பூர் வரவேற்க தயாரானது. இதில் ஒரு பகுதியியாக முதல் இரண்டு விமானங்களில் இன்று புதன்கிழமை (அக்டோபர் 20) காலை சுமார் 250 பயணிகள் சிங்கப்பூர் வந்திறங்கினார். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மூலம் இயக்கப்படும் நெதர்லாந்தில் இருந்து வரும் SQ329 என்ற விமானம் சுமார் 6.35 மணிக்கு 80 பயணிகளுடன் வந்திறங்கியது.

அதேபோல சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து, SQ317 என்ற விமானம் லண்டனில் இருந்து 170 பயணிகளுடன் வந்திறங்கியது. முதல் விமானம் ஆம்ஸ்டர்டாமில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 11.15 மணிக்கு அல்லது சிங்கப்பூர் நேரப்படி மாலை 5.15 மணிக்கு புறப்பட்டது. வந்திரனாகிய பயணிகளில் 3 குடும்பங்கள் தங்கள் குழந்தைகளோடு பயணம் செய்திருந்தார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. வருகை மண்டபத்தில் இயக்கக் கட்டுப்பாடுகள் கடுமையானதாக இருந்தன.

விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட டாக்ஸி ஸ்டாண்ட் அல்லது பிக்-அப் பாயிண்டிற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, PCR சோதனைகள் வர்கையாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டன. பயணிகளை வரவேற்க வந்த குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் ஒரு தனி பகுதியில் காத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

பயணிகளை சந்தித்த பிறகு, வாகனம் மூலம் வந்தவர்கள் கார் பார்க்கின் செல்வதற்கு தனி லிப்ட் சேவை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. காலை 6.35 மணி முதல் 7.50 மணி வரை ST செய்தி நிறுவனம் அங்கு சென்றபோது காத்திருக்கும் இடத்தில் மூன்று பேர் மட்டுமே காணப்பட்டனர் என்று கூறியுள்ளது.

Related posts