சிங்கப்பூரில் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் GST-யில் ஸுமர் 20,000 டாலருக்கு மேல் ஏய்ப்பு செய்த சிங்கப்பூரில் உள்ள சரக்கு பகிர்தல் நிறுவனத்தின் இயக்குனருக்கு 1,05,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. “I-Do” லாஜிஸ்டிக்ஸ் இயக்குநர் டாங் யோங் ஹோ (43 வயது) ஒரு சுங்க அதிகாரியிடம் தவறான தகவலை வழங்குவதற்காக ஒரு ஒப்பந்ததாரரை ஊக்குவித்ததாக தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். மேலும் 67 இறக்குமதி அனுமதிகள் மற்றும் மொத்தம் 16,842 வெள்ளி வரி ஏய்ப்பு செய்து ஜிஎஸ்டியைத் தவிர்த்துள்ளார்.
மேலும் செப்டம்பர் 27 அன்று தீர்ப்பளிக்கும் போது இதே போன்ற மற்றொரு இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன. I-DO சீனாவில் உள்ள தனது வணிகப் பங்காளியிடமிருந்து பொருட்களை இறக்குமதி செய்கிறது. அதன் பிறகு அவற்றை இங்கு வரிசைப்படுத்தி விற்பனை செய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த டான், I-DO லாஜிஸ்டிக்ஸ் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பை குறைவாக அறிவித்து. மார்ச் 2017 மற்றும் செப்டம்பர் 2018-க்கு இடையில் ஜிஎஸ்டி-யில் 20,204 டாலர்களை ஏய்ப்பு செய்துள்ளார்.
பட்டியல்கள் பொருட்களின் உண்மையான மதிப்பை கொடுக்கவில்லை என்று தெரிந்திருந்தும்.
அனுமதிகளுக்கு விண்ணப்பிக்க, அவர் தனது சீன வணிக கூட்டாளரிடமிருந்து பெற்ற பேக்கிங் பட்டியல்களைப் பயன்படுத்தியுள்ளார். அவருடைய இந்த வேலைகள் ஜூலை 31, 2018 அன்று சுங்க அதிகாரிகளின் நடத்திய ஆய்வுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதேபோன்ற தவறான தகவல்களை சுங்க அதிகாரிகளுக்கு வழங்க மற்ற சரக்குதாரருக்கு டாங் ஊக்குவித்ததாகக் கண்டறியப்பட்டது. தற்போது சரக்குதாரருக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்கின்றன.
சிங்கப்பூரில் சுங்கச் சட்டத்தின் கீழ், ஜிஎஸ்டியைத் தவிர்ப்பது அல்லது தவிர்க்கும் முயற்சிகளில் ஈடுபடும் எந்தவொரு நபருக்கும் 20 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும்.