TamilSaaga

முதியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி – முன்னேற்பாடுகள் தேவையில்லை

சிங்கப்பூரில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் தடுப்பூசி நிலையங்கள் மற்றும் பலதுறை மருந்தகங்களில் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்.

முதியவர்கள் பலரும் இதனை வரவேற்கிறார்கள். முன்னேற்பாடுகள் காரணமாக தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் தாமதமாவதாக இருந்த சூழலில் தற்போது எளிமையாக அதனை பெற முடிவதாக தெரிவிக்கின்றனர்.

சிங்கப்பூர் செங்காங் தடுப்பூசி நிலையத்தில் சுமார் 30 சதவீதம் முதியவர்கள் முன்னேற்பாடுகள் இல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள் என சுகாதார மேம்பாட்டு வாரிய அதிகாரி எல்வின் இங் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது தவணை தடுப்பூசியை 6 மாதம் முன்பு செலுத்திக்கொண்ட முதியவர்கள் பூஸ்டர் தடுப்பூசி பெற தகுதியானவர்கள்.

அதாவது கடந்த ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பாக கொரோனா இரண்டாவது தடுப்பூசியை செலுத்திக்கொண்ட முதியவர்கள் முன்னேற்பாடுகள் இன்றி பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts