TamilSaaga

சிங்கப்பூர் மாநாட்டில் ஆண் பெண் இருவருக்கும் பொதுவாக ஒதுக்கப்பட்ட கழிப்பறை…. சரமாரியாக கருத்துக்களை விலாசும் நெட்டிசன்கள்…

சிங்கப்பூரில் தற்பொழுது ‘Wikimania 2023’ எனப்படும் மாநாடானது சன் டெக் கண்காட்சி நிலையத்தில் நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கிய மாநாடு ஆனது ஆகஸ்ட் 19 வரை நடக்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இம் மாநாட்டிற்கு வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பொதுவாக உபயோகிக்கும் வண்ணம் கழிப்பறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த புகைப்படங்களானது இணையத்தில் வெளியான நிலையில், மாறுபட்ட கருத்துக்கள் தற்பொழுது பகிரப்பட்டு வருகின்றன.

இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்யும் குழுவானது ஆண்களும்,பெண்களும் தற்காலிகமாக உபயோகிக்கும் வண்ணம் பொதுவான கழிப்பறைகளை அமைக்கும்படி கேட்டுக் கொண்டதால் இவ்வாறு அமைக்கப்பட்டதாக செய்தியாளரிடம் கூறப்பட்டுள்ளது. ஒருபுறம், ஆண் பெண் இருவரையும் சமமாக பார்ப்பதற்கு இது ஒரு நல்ல தொடக்கம் என நேர்மறையான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதே நேரம், ஆண், பெண் இருவருக்கும் ஒரே மாதிரியான கழிப்பறை எப்படி சாத்தியமாகும் என்று சிலர் எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த மாநாட்டினை நடத்தும் wikimedia நிறுவனமானது சமுதாயத்தில் சிறுபான்மையினர் சந்திக்கும் அவலங்களுக்கு குரல் கொடுக்கும் ஒரு அற நிறுவனம் ஆகும். இது குறித்து, இந்த நிறுவனம் இதுவரை எந்த கருத்துக்களையும் தெரிவிக்காத நிலையில் இணையவாசிகள் கழிப்பறை தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Related posts