TamilSaaga

“பாண்டாவுக்கு பெயர் வைக்க நவம்பர் 7 வரை நேரம் இருக்கு” : சிங்கப்பூர் “Mandai” விலங்குகள் சரணாலயம் தகவல்

பல ஆண்டு கால முயற்சிக்கும் பல தோல்விகளுக்கு பிறகு அண்மையில் சிங்கப்பூரின் Jia Jia பாண்டா ஒரு குட்டியை ஈன்றது. சிங்கப்பூர் River Safari நிறுவனம், பாண்டாவின் இனப்பெருக்க முயற்சிகளை கடந்த 2015ல் தொடங்கிய பின்னர், ஆறு வருடங்களுக்கு பிறகு ஒரு வெற்றிகரமாக இணைப்பை அண்மையில் சாத்தியப்படுதியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியா ஜியா-வின் முதல் கர்ப்பம் மற்றும் ஒரு குட்டியின் பிறப்பு சிங்கப்பூரில் உள்ள இந்த அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் பராமரிப்பில் எங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் என்று ரிவேர் சஃபாரி தெரிவித்துள்ளது. இந்த குட்டியின் பிறப்பு என்பது, சீனாவின் பாண்டா நிபுணர்களின் மதிப்புமிக்க ஆலோசனையுடன், நல்ல விலங்கு பராமரிப்பு, உதவி இனப்பெருக்க அறிவியல் மற்றும் எங்கள் ஊழியர்களின் முழுமையான விடாமுயற்சியின் விளைவாகும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Video Courtesy – Mandai Wildlife Reserve Facebook

புதிதாகப் பிறந்த குட்டியை வளர்க்க முதல் முறையாக தாய்க்கு ஆதரவளிப்பதன் மூலம் இப்போது எங்களுடைய வேலை தொடர்கிறது, என்று சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைமை வாழ்க்கை அறிவியல் அதிகாரி செங் வென்-ஹூர் கூறினார். இந்த புதிய பாண்டா குட்டி கடந்த ஆகஸ்ட் 14, 2021 அன்று சபாரி ஆற்றில் பிறந்தது அதன் பிறகு இந்த குட்டி ஒரு ஆண் குட்டி என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் வரம் நவம்பர் 21ம் தேதி இந்த குட்டி பிறந்து 100 நாட்கள் பூர்த்தியாகும் முன்பே பொதுமக்கள் இந்த குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை சமர்ப்பிக்க அழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் Hong Hong, Le Le, Xin Le, Xin Yang மற்றும் Xin Yuang ஆகிய 5 பெயர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts