சிங்கப்பூரில் ஹாலந்து புக்கிட் தீமா தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஆன் அவர்கள் நோய்ப்பரவல் கால சூழலில் பொதுமக்கள் வீட்டில் இருந்தே வேலை செய்கிறார்கள். இதனால் புகைப்பிடிக்கும் போது அந்த காற்றை சுவாசிக்க வேண்டிய நிலை உள்ளதாக புகார்கள் அதிகம் வருகின்றன என்று கூறினார்.
இந்த புகார்களுக்கு தீர்வு காணும் வகையில் Clementi Ridges, Trivelis ஆகிய வட்டார பகுதியில் சுமார் 70 க்கு அதிகமான குடியிருக்கும் மக்களிடம் கலந்து ஆலோசித்து புகை பிடிப்பதற்கென தனியாக இரண்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த முன்னோடி திட்டத்தை செயல்படுத்த அடித்தளத்தின் உறுப்பினர்களுடன் முடிவெடுக்கப்பட்டு தற்போது சோதனைக்காக அங்கு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரு அறைகளும் சோதனைக்காக சுமார் 1 வருடம் அங்கு பராமரிக்கப்படும்.
Photo courtesy: Facebook page of Smoking Cabin SG