TamilSaaga

Exclusive: சிங்கப்பூர் செல்ல முன்பதிவு செய்தவர்கள் கவனத்திற்கு.. தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் புறப்பட வேண்டிய விமானங்கள் அடுத்தடுத்து ரத்து!

சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக Omicron வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது வரும் 25 ஜனவரி 2022 அன்று தனது சிங்கப்பூர் – திருச்சி இடையிலான சேவையை ரத்து செய்வதாக தகவல் அனுப்பியுள்ளது Indigo விமான சேவை நிறுவனம். அதே போல நாளை 24 ஜனவரி 2022 அன்று புறப்படவேண்டிய திருச்சி – சிங்கப்பூர் விமான சேவையையும் Indigo நிறுவனம் தற்போது ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த மாதம் பிப்ரவரி 16, 2022 சென்னையில் இருந்து மும்பை வழியாக சிங்கப்பூர் செல்லவிருந்த Vistara விமான சேவையும் ரத்தாகியுள்ளது. சிங்கப்பூரில் Omicron பரவல் எதிரொலியால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக Indigo நிறுவனம் பயணிகளுக்கு அனுப்பிய தகவலில் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : Breaking: சிங்கப்பூரில் விளையாட்டு பூங்காவில் இரு மகன்களையும் கொன்று வீசிய தந்தை – உதவிக்காக அலறி உயிரிழந்த பரிதாபம்!

மேலும் பல நாடுகள் தற்போது தங்கள் எல்லைகளை மீண்டும் கடுமையாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எதிர்வரும் தேதிகளில் விமான ரத்து குறித்து Indigo இதுவரை எந்தவித தகவலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த தேதியில் டிக்கெட் புக் செய்த பயணிகள் மாற்று தேதியில் பயணிக்க விமான சேவை நிறுவனம் ஆவணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிங்கப்பூரில் தற்போது தொற்று பரவல் அதிகரித்துப்பது குறித்து சிங்கப்பூரின் பல அரசியல் தலைவர்கள் பல எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் நேற்று சனிக்கிழமை (ஜனவரி 22) நண்பகல் நிலவரப்படி 2,463 புதிய COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 2,218 உள்ளூர் வழக்குகள் மற்றும் 245 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சகம் (MOH) கடந்த வெள்ளிக்கிழமை அதன் தினசரி அறிக்கையிடல் கட்டமைப்பை மாற்றியுள்ளது என்பது நினைவுகூரத்தக்கது. Protocol 2ஐ சேர்ந்த வழக்குகளும் இதில் அடங்கும். ப்ரோட்டோகால் 2 வழக்குகள் என்பது நல்ல நிலையில் உள்ளவர்கள் மற்றும் நேர்மறை சோதனை செய்தவர்கள் அல்லது லேசான நிலையில் இருப்பதாக மருத்துவரால் மதிப்பிடப்பட்டவர்கள். ஒவ்வொரு நாளும் இரண்டு வகை எண்ணிக்கை அறிவிக்கப்படும் – ஒன்று PCR சோதனைகள் மூலம் உறுதிசெய்யப்பட்ட நோய்த்தொற்றுகள், மற்றொன்று புரோட்டோகால் 2 வகை.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் வங்கி கணக்கு மோசடி” : சேமிப்புகளை இழக்கும் அப்பாவி மக்கள் – களமிறங்கும் சிங்கப்பூரின் SNDGG

MOH இணையதளத்தில் சமீபத்திய தொற்று புள்ளிவிவரங்களின்படி, நேற்று ஒரு மரணம் ஏற்பட்டது. இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 847 ஆக உயர்ந்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts