ஒட்டுமொத்த சிங்கப்பூரையே கடந்த 2 நாட்களாக கலங்க வைத்த சம்பவம் என்றால், அது Jason Tan-வின் விபத்து சம்பவம் தான். உணவு டெலிவரி வேலையில் ஈடுபட்டிருந்த சிங்கப்பூரைச் சேர்ந்த Jason கடந்த (ஏப்ரல்.10) நடந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்.
கடந்த மார்ச் 5ம் தேதி தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. 6 வருடங்களாக காதலித்து வந்த பெண்ணை தான் இவர் திருமணம் செய்து கொண்டார். இப்போது அவர் 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
மனைவியின் பிரசவத்துக்கு பணம் சேமிப்பதற்காக, கடந்த ஞாயிற்றுக்கிழமை Incentive கிடைக்கும் என்று Delivery பணியில் ஈடுபட்டிருந்த Jason, Sembawang-ன் Gambas Avenue-ல் நடைபெற்ற ஒரு மோசமான சாலை விபத்தில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் விபத்தில் பலியான Jason-ன் 24 வயதான மனைவிக்கு நிதியுதவி திரட்டப்பட்டு வருகிறது. ரே ஆஃப் ஹோப் (Ray of Hope) என்ற தொண்டு நிறுவனத்தால் நிதி திரட்டும் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி நிலவரப்படி சுமார் 150 நன்கொடையாளர்களிடமிருந்து சுமார் $7,000 பெறபபட்டுள்ளது
இதில், $200,000 வரை நிதி திரட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரில் விருப்பம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும், அந்த பெண்ணுக்கு உதவலாம். இங்கு பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களும் தங்களால் முடிந்த சிறு தொகையை உதவியாக கொடுக்கலாம்.
ரே ஆஃப் ஹோப் உறுப்பினர்கள் திரு டானின் சகோதரர் திரு ஜெர்மி டானிடம் பேசினர், அவர் சில காப்பீட்டுத் தொகை இருக்கும் என்றாலும், அந்தக் குடும்பம் எவ்வளவு தொகையாக இருக்கும் என்று தெரியவில்லை.