TamilSaaga

“டாக்சி ஓட்டுநர் இனவாத கருத்துக்களை பேசியதால் தாக்கினேன்” – CEOவுக்கு இரண்டு வார சிறை

சிங்கப்பூரில் ஒரு மொத்த வர்த்தக நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ஒருவர் கடந்த புதன்கிழமையன்று (ஜூலை 21) ஒரு டாக்ஸி ஓட்டுநரை தாக்கியது தொடர்பாக அவருக்கு இப்பொது இரண்டு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆர் & ஜே யூனியன் என்ற நிறுவனத்தை சேர்ந்த 26 வயதான முகமது அல்வீ ராணா, விசாரணையின்போது தானாக முன்வந்து தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் ராஜதுரை துரைசாமி என்ற அந்த சிங்கப்பூர் டாக்ஸி ஓட்டுநர் முகமது அல்வீ ராணாவை இனவெறி கருத்துக்களை கொண்டு திட்டியதாக கூறப்பட்டது.

ஆனால் 58 வயதான அந்த டாக்ஸி டிரைவர் தன் மீது வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து வக்கீல் லிடியா கோ கூறுகையில், அல்வீயும் அவரது காதலியும் 2019 அக்டோபர் 21ம் தேதி இரவு 10 மணியளவில் போட் க்வே அருகே ராஜதுரையின் டாக்ஸியில் ஏறிவுள்ளனர்.

டாக்ஸியில் ஏறிய பிறகு ஆல்வீ ரேடியோ சேனலை மாற்றுமாறு டிரைவரிடம் கேட்டுள்ளார், ஆனால் அதற்கு அந்த ஓட்டுநர் தனக்கு எப்படி இதை மாற்றுவது என்று தெரியவில்லை என்று பதிலளித்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பா இடத்தில் பல நிகழ்வுகள் நிகழ்த்து ஒரு கட்டத்தில் ஓட்டுநரின் சட்டையை பிடித்து வெளியில் இழுத்துள்ளார் அல்வீ.

அதன் பிறகு அவர் அந்த ஓட்டுநர் போலீசாரை அழைத்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த நபருக்கு 2 வார சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

Related posts