சிங்கப்பூரில் வரும் ஆகஸ்ட் 18 2021 வரை 2-ம் கட்ட உயர் எச்சரிக்கை நடைமுறையில் இருப்பதால், மனிதவள அமைச்சகம் அனைத்து புலம்பெயர்ந்த உள்நாட்டு தொழிலாளர்களையும் (MDWs) திருத்தப்பட்ட பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை (SMMs) கடைபிடிக்க நினைவூட்டுகிறது. இதுகுறித்து சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் தங்களது முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.
முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள், நீங்கள் வெளியே செல்ல வேண்டியிருந்தால், அதை குறுகியதாகவும் பாதுகாப்பானதாகவும் வைத்திருங்கள். மற்றவர்களுடனான தொடர்புகளை குறைத்து எப்போதும் முகமூடியை அணியுங்கள். பெருந்தொற்று பரவுவதைத் தடுக்கவும் சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் நாம் அனைவரும் நம்மால் முடிந்ததைச் செய்வோம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தகவலை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியிட்டுள்ளது மனிதவள அமைச்சகம். நாட்டின் தொற்றின் அளவு சற்று அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையால் இந்த இக்கட்டான சூழலில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்து செயல்பட்டால் நிச்சயம் தொற்றின் அளவை முழுமையாக குறைத்து பெருந்தொற்று இல்லாத சிங்கப்பூரை நம்மால் உருவாக்க முடியும்.