2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) வரும் பிப்ரவரி 18ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் .செய்ய இருக்கிறார்
பட்ஜெட் அறிக்கை சேனல் 5, CNA, CNA938, Capital 958, CNA இணையதளம், CNA YouTube, CNA Facebook, 8 World News, 8 World News YouTube, 8 World News Facebook மற்றும் MediaCorp இன் meWATCH ஆகியவற்றில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
காதுகேளாதோருக்கான சிங்கப்பூர் சங்கம் (SADeaf) சேனல் 5 இல் பட்ஜெட் அறிக்கைக்கு ஒரே நேரத்தில் சைகை மொழி விளக்கத்தையும் வழங்கும்.
நிதி அமைச்சகத்தின் முகநூல் பக்கம், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் கணக்கில் உரையிலிருந்து முக்கிய அறிவிப்புகளின் நிகழ்நேர updates நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
பொதுமக்கள் Singapore Budget website பார்வையிடலாம் மற்றும் முழு பட்ஜெட் வெளியான பிறகு அதனை மின்னஞ்சல் மூலம் பெறலாம். பிப்ரவரி 18 அன்று மதியம் 2 மணி வரை இந்தச் சேவை பதிவு செய்யக் கிடைக்கும்.
2022 பட்ஜெட் அறிக்கை மீதான கருத்து
நிதி அமைச்சகம், REACH மற்றும் People’s Association (PA) உள்ளிட்ட பல்வேறு ஏஜென்சிகள் கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து 2022 பட்ஜெட்டுக்கு முன்னதாக பொதுமக்களை ஈடுபடுத்தி வருகின்றன. அறிக்கை வெளியான பிறகு, பல்வேறு feedback channels மூலம் பட்ஜெட் குறித்த தங்கள் கருத்துக்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
REACH பிப்ரவரி 24 மற்றும் பிப்ரவரி 26 ஆகிய தேதிகளில் இரண்டு virtual பட்ஜெட் உரையாடல்களை நடத்தும். ஆங்கிலம் மற்றும் மாண்டரின் மொழிகளில் அவை இருக்கும்.
நிதித் துறைக்கான இரண்டாவது அமைச்சர் இந்திராணி ராஜா, ஆங்கில அமர்வுக்கு தலைமை தாங்குவார், அதே சமயம் Communications and Information அமைச்சர் ஜோசபின் தியோ, மாண்டரின் அமர்வுக்கு தலைமை தாங்குவார்.
REACH தலைவர் Tan Kiat இரு அமர்வுகளிலும் கலந்துகொள்வார்.
அதுமட்டுமின்றி, REACH சிங்கப்பூர் முழுவதும் “high traffic nodes” கேட்கும் points-களை உருவாக்கி பட்ஜெட் குறித்த பார்வைகளைச் சேகரிக்கும்.
இந்த listening points-களின் விவரங்களை REACH-ன் பட்ஜெட் இணையதளத்தில் காணலாம். பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள REACH இன் WhatsApp Chat குழுக்களில் சேரலாம்.
PA மற்றும் அதன் அமைப்புக்கள் பட்ஜெட் 2022 நடவடிக்கைகளில் சிங்கப்பூர் வாசிகளை ஈடுபடுத்துவதற்கு பட்ஜெட்டுக்கு பிந்தைய உரையாடல்களை ஏற்பாடு செய்யும்.
ஆர்வமுள்ள சிங்கப்பூர்வாசிகள் பிப்ரவரி 28 அன்று மதியம் 2 மணி வரை go.gov.sg/postbudget2022 இல் பதிவு செய்யலாம்.
வளர்ச்சியடைந்து வரும் கோவிட்-19 சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பொது சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக, பட்ஜெட்டுக்குப் பிந்தைய அவுட்ரீச் மற்றும் engagement திட்டங்கள் சரிசெய்யப்படலாம். அதன் Updates நிதி அமைச்சகம், ரீச் மற்றும் PA ஆகிய இணையதளங்கள் அல்லது சமூக ஊடக சேனல்களில் வெளியிடப்படும்.