சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை 1000ஐ கடந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக 2000ஐ கடந்து தற்போது 3000ஐ நெருங்கும் நிலைக்கு வந்துள்ளது. வல்லுநர்கள் பலர் எச்சரித்ததை போலவே நாட்டில் தற்போது தொற்றின் அளவு என்பது அதிகரித்து கொண்டே வருகின்றது. இருப்பினும் சிங்கப்பூரில் தடுப்பூசி விகிதமும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் வருகின்றது. இதுவரை நாட்டில் 85 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளில் அண்மைக்காலமாக மீண்டும் தொற்றின் அளவு என்பது அதிகரித்து வருகின்றது. குறிப்பாக CNA செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் 6 Dormitoryகளில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. அதே சமயம் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதிகளை தாண்டி இந்த தொற்று குழுமங்கள் பரவவில்லை என்றும் CNA தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிட்ட தொற்று அளவின் தகவலின்படி 452 பேருக்கு Dormitoryகளில் தொற்று பதிவானது. ஜூரோங் பெஞ்சுரு தங்குமிடம் 1, ஜூரோங் பெஞ்சுரு தங்குமிடம் 2, ஏஎஸ்பிஆர்ஐ-வெஸ்ட்லைட் பாப்பன் விடுதி, 9 டெஃபு தெற்கு தெரு 1 தங்குமிடம், கோக்ரேன் லாட்ஜ் 2 தங்குமிடம் மற்றும் பிபிடி லாட்ஜ் 1 பி தங்கும் விடுதி உள்ளிட்ட இடங்களில் தொற்று எண்ணிக்கை பதிவானது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி ஜூரோங் பெஞ்சுரு தங்குமிடம் 1ல் 48 பேருக்கும், ஜூரோங் பெஞ்சுரு தங்குமிடம் 2ல் 44 பேருக்கு. ஏஎஸ்பிஆர்ஐ-வெஸ்ட்லைட் பாப்பன் விடுதியில் 97 பேருக்கும். 9 டெஃபு தெற்கு தெரு 1 தங்குமிடத்தில் 97 பேருக்கும் தொற்று பரவல் ஏற்பட்டது.
இன்றைய நிலவரப்படி ப்ளூ ஸ்டார் விடுதியால் தான் அதிக நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.