TamilSaaga

“சிங்கப்பூரில் மக்களுக்காக புக்கிட் பஞ்சாங், கல்லாங்கில் இரு பாலிகிளினிக் திறக்கப்பட்டுள்ளது” – சுகாதார அமைச்சர்

சிங்கப்பூரில் புக்கிட் பஞ்சாங் மற்றும் கல்லாங்கில் இன்று சனிக்கிழமை (அக்டோபர் 2) இரண்டு புதிய பாலி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கிளினிக்கள் அதற்கு தொடர்புடைய வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. புக்கிட் பஞ்சாங் பாலிக்ளினிக் ஒரு முதியோர் இல்லத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கல்லாங் பாலிக்ளினிக் ஒரு நாள்பட்ட நோய்வாய்ப்பட்ட பிரிவுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ளது.

புக்கிட் பஞ்சாங் பாலிக்ளினிக்கில் 365 படுக்கைகள் மற்றும் 60 நாள் பராமரிப்பு இடங்கள் முதியோருக்கு வழங்கப்படுகின்றன. அதே போல கல்லாங் பாலிக்ளினிக்கில் 128 படுக்கைகள் நீண்டகால நர்சிங் மற்றும் அடிக்கடி மருத்துவ பராமரிப்பு தேவைப்படும் மேம்பட்ட மற்றும் சிக்கலான நாள்பட்ட மருத்துவ நிலைமைகளைக் கொண்ட நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை கொண்டுள்ளது. மேலும் யூனோஸில் மூன்றாவது பாலி கிளினிக், டிசம்பரில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு மூத்த பராமரிப்பு மையத்துடன் இணைக்கப்பட்டும்.

விளையாட்டு மையங்கள் போன்ற வசதிகளை உள்ளடக்கிய சுகாதார வசதிகள் அல்லது சமூக வசதிகளுடன் பாலி கிளினிக்ஸை இணைப்பதன் மூலம், முழுமையான பராமரிப்பு மற்றும் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கூட்டுத் திட்டங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை நாங்கள் திறக்கிறோம்” என்று சுகாதார அமைச்சர் ஓங் யே குங் கூறினார். புக்கிட் பஞ்சாங் பாலிக்ளினிக்கை இன்று சனிக்கிழமையன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கும்போது அவர் இதை கூறினார்.

புக்கிட் பஞ்சாங் பாலிக்ளினிக் 12 மாடி கட்டிடத்தில் மூன்று தளங்களை ஆக்கிரமித்துள்ளது. மற்றும் ஒரு நர்சிங் ஹோமுடன் ஒருங்கிணைக்கப்பட்ட முதல் இடம் இதுவாகும். புக்கிட் பஞ்சாங் மற்றும் கல்லாங்க் ஆகிய இடங்களில் பாலி கிளினிக் திறப்பு தற்போது சிங்கப்பூரில் 22 பாலி கிளினிக் மையங்கள் உள்ளதை குறிக்கின்றது. புக்கிட் மேரா மற்றும் அவுட்ராம் பாலி கிளினிக்ஸ் 2030 வாக்கில் தியோங் பஹ்ருவில் ஒரு பெரிய, அதிக விசாலமான ஒன்றாக ஒருங்கிணைக்கப்படும் என்றும், குடியிருப்பாளர்களுக்கு சிறந்த சேவை செய்வதற்காக பரந்த அளவிலான திறன்களைக் கொண்டதாகவும் திரு ஓங் அறிவித்தார். இதில் வயதான நட்பு மற்றும் அணுகல் அம்சங்கள் அடங்கும்.

Related posts