சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களுக்கு நிச்சயம் இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கலாம். வார இறுதிகளில் அல்லது விடுமுறை நாட்களில் ஜஸ்ட் ரிலாக்ஸ் செய்வதற்கான நல்ல வாய்ப்பு இது.
ஆம்! வரும் அக்டோபர் 14 முதல், சிங்கப்பூரின் தெற்குத் தீவுகளுக்குச் செல்பவர்கள், வாடகை சைக்கிள் மூலம் செயின்ட் ஜான்ஸ் தீவு மற்றும் அதை ஒட்டிய லாசரஸ் தீவைச் ஜாலியாக சுற்றி வரலாம்.
இரண்டு தீவுகளும் ஒரு பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளன.
சென்டோசாவில் உள்ள நிறுவனமான Gogreen இந்த வாடகை சைக்கிள்களை வழங்குகிறது. முன்னதாக, கடந்த செப்டம்பர் 2021ம் தேதி இங்கு நடந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்த நிலையில், வரும் 14ம் தேதி பயணிகளுக்காக திறக்கப்பட உள்ளது.
சென்டோசா டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் மூலம் டெண்டர் எடுத்துள்ளதால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செயின்ட் ஜான்ஸ் தீவில் இந்த வாடகை சைக்கிள் பயணம் வழங்கப்படும்.
இரண்டும் மணி நேரத்திற்கு சைக்கிள் வாடகையாக S$25 வசூலிக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் கிக் ஸ்கூட்டர்களையும் எடுத்துக் கொள்ளலாம். இதன் வாடகையும் 25 சிங்கப்பூர் டாலர் தான்.
ஆர்வமுள்ளவர்கள் கோ கிரீன் இணையதளத்தில் சைக்கிள் மற்றும் கிக் ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்யலாம்.
அதுமட்டுமின்றி, சுற்றுலா பயணிகள் beach mats, கூடாரங்கள் மற்றும் காத்தாடிகள் போன்றவற்றையும் வாங்கிக் கொள்ளலாம். கூடாரம் அமைத்து நண்பர்களுடன் கொண்டாடலாம்.
செயல்படும் நேரம்:
திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10 முதல் மாலை 4:30 வரை
சனி முதல் ஞாயிறு வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை