TamilSaaga

சிங்கப்பூரில் ட்ரோன் மூலம் யுனிவர்சிட்டி விட்டு யுனிவர்சிட்டி பறந்த காதலன்… சத்தம் போடாமல் காதலியை ஃபோட்டோ எடுக்க நினைத்து சிக்கிய பரிதாபம்!

பசங்க என்னமா அட்வான்ஸா போறாங்க என்பதற்கு இந்த சம்பவம் ஜஸ்ட் ஒரு சாம்பிள் எனலாம்.

சிங்கப்பூரில் உள்ள National University of Singapore-ல் படித்து வருபவர் 25 வயதான Xu Zi Zhou. சீனாவைச் சேர்ந்தவர். இவர் Nanyang Technological University-ல் படிக்கும் தனது காதலியை புகைப்படம் எடுக்க விரும்பி ட்ரோன் ஒன்றை வாங்கியிருக்கிறார்.

DJI Mavic Air 2 என்ற அந்த 568.5g எடை கொண்ட ட்ரோனை ஆன்லைன் ஷாப்பிங் தளமான Shopee-ல் வாங்கியிருக்கிறார்.

பிறகு, தனது பல்கலைக்கழகத்திலேயே அந்த ட்ரோனை இயக்கி பயிற்சி எடுத்து சோதனை செய்திருக்கிறார். எல்லாம் வெற்றிகரமாக அமைய, காதலியின் பல்கலைக்கு ட்ரோனை பறக்கவிட்டது மட்டுமில்லாமல், வெற்றிகரமாக காதலி மற்றும் அவருடைய நண்பரை புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுத்திருக்கிறார். (கெட்டிக்காரர் தான் போல)

மேலும் படிக்க – சிங்கப்பூரில் 3 குழந்தைகளை தவிக்கவிட்டுச் சென்ற ஊழியர்.. கடமையே கண்ணாக இருந்து கடைசி நேரத்தில் உயிரை விட்ட சோகம்!

இந்நிலையில், சராசரி கடல் மட்டத்திலிருந்து அதிகபட்சமாக 518.37 அடி அல்லது 158 மீ உயரத்தில் தெங்கா விமான நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் ஆளில்லா விமானம் பறப்பது குறித்து சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்துக்கு (CAAS) தகவல் பறந்தது.

உடனடியாக இரண்டு CAAS அதிகாரிகள் Xu-ன் பல்கலைக்கு விரைந்து, அந்த ஆளில்லா விமானத்தை தரையிறக்கும்படி உத்தரவிட, பதறியடித்துக் கொண்டு ட்ரோனை கீழே இறக்கியிருக்கிறார்.

Xu அன்று மொத்தம் ஐந்து முறை அந்த ட்ரோனை இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டது, மொத்த 18 நிமிடங்கள் இயக்கியிருக்கிறார். இதையடுத்து, அந்த இளைஞருக்கு 5000 சிங்கப்பூர் டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts