சிங்கப்பூரில் பிளாக் 172 பிஷன் ஸ்ட்ரீட் 13க்கு அடுத்துள்ள திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 9) இரவு 2 மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு தீப்பிடித்து எறிந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது அருகில் இருந்தவர்களை நடுநடுங்க செய்துள்ளது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு, நேற்று இரவு 10.50 மணியளவில் இந்த வெடிப்பு மற்றும் தீ சம்பவம் பற்றி அறிவிக்கப்பட்டது.
பைக் வெடித்து சிதறிய காணொளி – Video Curtesy Sg Road Vigilante Singapore FB Page
செய்தி அறிந்து உடனடியாக வந்த SCDF படையினர் கொழுந்துவிட்டு எறிந்த தீயை அணைத்ததாகக் கூறியது. அந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததில் அந்த மோட்டார் சைக்கிள் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் எரிந்து நாசமானது. ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
Sg Road Vigilante என்ற முகநூல் பக்கத்தில் வெளியான இந்த காணொளியை எடுத்த அந்த நபரின் அருகில் இருந்த வெடிப்பின் கூச்சலிட்டதை கேட்கமுடிந்தது. யாரும் எரியும் வண்டிக்கும் அருகில் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.