TamilSaaga

Big 7 Travel வெளியிட்ட உலகளாவிய பட்டியல் : Hashtag-கில் அசத்தி முதலிடம் பிடித்த நம்ம சிங்கப்பூர்

உலகளாவிய பயண இணையதளமான Big 7 Travel வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த 2022ம் ஆண்டில் சிங்கப்பூர் தான் உலகின் மிகவும் இன்ஸ்டாகிராம் செய்யக்கூடிய இடமாகும் என்று அறிவித்துள்ளது. பயண இணையதளமான அந்த நிறுவனம், ஹேஷ்டேக்குகளின் எண்ணிக்கையை ஆய்வு செய்து, மற்றும் அவர்களின் சமூக பார்வையாளர்களிடமிருந்து கணக்கெடுப்பு முடிவுகளைப் பயன்படுத்தி இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : முதியவரிடம் 35,350 வெள்ளி அபேஸ் செய்த “ரவிவர்தன்” : சிங்கப்பூர் போலீசில் சிக்கியது எப்படி?

இந்த பட்டியலில் உலகம் முழுவதும் இருந்து 50 இடங்கள் இடம்பெற்றுள்ளன.

முதல் 10 இடங்கள் பிடித்த நாடுகள் பின்வருமாறு..

சிங்கப்பூர்

போராகே, பிலிப்பைன்ஸ்

ஓஹு, ஹவாய்

டோக்கியோ, ஜப்பான்

நியூயார்க் நகரம், நியூயார்க்

பான்ஃப், கனடா

அமல்ஃபி கடற்கரை, இத்தாலி

சிகாகோ, இல்லினாய்ஸ்

லிஸ்பன், போர்ச்சுகல்

ஹா லாங் பே, வியட்நாம்

50 நாடுகளின் பட்டியலை காண..

சிங்கப்பூர் ஸ்கைலைன் மிகவும் புகைப்படம் எடுக்கப்பட்ட ஒன்றாக தற்போது தேர்வாகியுள்ளது. அக்டோபர் 19, 2021 அன்று வெளியிடப்பட்ட Pixsyன் மற்றொரு ஆய்வில், உலகில் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட ஸ்கைலைன்களின் பட்டியலில் சிங்கப்பூர் இருந்தது. ஆன்லைன் இமேஜின் கண்காணிப்பு தளமான Pixsy, உலகெங்கிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட நகரங்களுடன் தொடர்புடைய Instagram இடுகைகளை ஹேஷ்டேக்குகளுடன் தொகுத்து செப்டம்பர் 2021ல் ஆய்வை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் சிங்கப்பூர் 14வது இடம் பிடிக்க, நியூயார்க் நகரம் முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த பட்டியலில் உள்ள மற்ற அமெரிக்க நகரங்களில் சிகாகோ (2வது இடம்), பாஸ்டன் (4), டல்லாஸ் (9) மற்றும் சியாட்டில் (10) ஆகிய இடங்களை பிடித்துள்ளது.

இதையும் படியுங்கள் : உங்களிடம் சிங்கப்பூர் Class 3 License உள்ளதா? : நீங்கள் இந்தியாவில் உள்ளவரா? – S Pass, Work Permitல் உடனடி வேலை

சுற்றுலாப் பயணிகளால் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட நகரங்களின் பட்டியலையும் இந்த தளம்வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நகரத்தின் வருடாந்திர பார்வையாளர்களின் சராசரி எண்ணிக்கையுடன் மொத்த இடுகைகளின் எண்ணிக்கையை ஒப்பிடுவதன் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சிங்கப்பூர் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இந்தோனேசியாவின் ஜகார்த்தா முதலிடத்திலும், ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts