TamilSaaga

சிங்கப்பூர் சாலை பாதுகாப்பு விருதுகள் – சிறந்த டிரைவர்கள் பிரிவில் விருதுகளை குவித்த “தமிழர்கள்” – குவியும் பாராட்டு

Singapore Road Safety Awards: சிங்கப்பூர் சாலை பாதுகாப்பு விருதுகள் (SRSA) சிங்கப்பூர் சாலை பாதுகாப்பு கவுன்சிலால் (SRSC), போக்குவரத்து காவல்துறை (TP), நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) மற்றும் பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் (WSHI) ஆகியவற்றின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் பொறுப்புடன் பணியாற்றும் நிறுவனங்கள், முன்மாதிரியாக திகழும் நிறுவனங்கள், நிறுவன ஓட்டுநர்கள்/ரைடர்கள் ஆகியோரின் முயற்சிகளை SRSA அங்கீகரிக்கிறது. மேலும், இது மற்ற சாலை பயனர்களின் பாதுகாப்பிற்கும் பங்களிக்கிறது.

SRSA 2021 இந்த ஆண்டு இதற்கான நிகழ்ச்சியை ஆன்லைனில் ஏற்பாடு செய்தது. விருது வென்றவர்கள் SRSC இன் Facebook பக்கத்தில் வெளியிடப்படும் வீடியோவில் இடம்பெறுவார்கள். (URL: https://www.facebook.com/SingaporeRoadSafetyCouncil).

மேலும் படிக்க – “ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..” – அதிகரிக்கப்படும் சிங்கப்பூர் காவல்துறைக்கான அதிகாரங்கள்

உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய மேம்பாட்டு அமைச்சகத்தின் அமைச்சரும் இணை பேராசிரியருமான முஹம்மது பைசல் இப்ராஹிம் கூறுகையில், “போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்த, நன்கு பராமரிக்கப்படும் வாகனங்கள் மற்றும் ஓட்டுனர் ஆதரவு அமைப்புகளில் முதலீடு செய்யலாம். இந்த முதலீடுகள் வணிகக் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கக் கூடாது. அவை சிறந்த உற்பத்தித்திறனுக்கு வழிவகுக்கும் மற்றும் போக்குவரத்து விபத்துக்களால் ஏற்படும் செலவுகளைக் குறைப்பதால், அவை சாலைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் தார்மீகக் கடமையை முக்கியமாக நிறைவேற்றுகின்றன.

சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் திரு பெர்னார்ட் டே கூறுகையில், “ஆன்லைன் வர்த்தக நடவடிக்கைகளின் ஏற்றம் காரணமாக, தளவாடங்கள் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. பல ஆண்டுகளாக சாலையில் அதிகமான டெலிவரி வாகனங்களை நாங்கள் காண்கிறோம். எனவே, நமது சாலைகளை அனைவருக்கும் பாதுகாப்பாக மாற்றுவதில் அவர்கள் தங்கள் பங்கைச் செய்வார்கள் என்பதை உறுதிப்படுத்த இந்த நிறுவனங்களை ஈடுபடுத்துவது முக்கியம்” என்றார்.

இந்நிலையில், தற்போது விருதுகள் வழங்கப்பட்டது. இதில் பாதுகாப்பான டிரைவர்கள் பட்டியலில், Light Goods Vehicle Fleet பிரிவில் தமிழர் செல்வராசு பாக்யராஜ் விருதை வென்றுள்ளார். Big-Foot Logistics Pte Ltd நிறுவனத்தில் செல்வராசு பணியாற்றி வருகிறார்.

அதேபோல், Heavy Goods Vehicle Fleet பிரிவில், பாலகிருஷ்ணன் “Excellence” விருதை வென்று முதலிடம் பிடித்துள்ளார். இவர் PSA Corporation Limited நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் துறைமுகத்தில் கடந்த 47 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார், பத்தாண்டுகளாக சாலை பாதுகாப்பை பராமரிப்பதில் கடமைப்பட்டுள்ளார். அவரது அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் கண்டிப்பாக அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகளை உருவாக்குவதில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க – “சாப்பிட்டு காசு கொடுக்க வேண்டாம்” – சிங்கப்பூர் “அன்னலக்ஷ்மி” உணவகம் | Singapore Annalakshmi Restaurant

Private Bus Fleet பிரிவில், மணிமாறன் “Merit” விருது வென்றுள்ளார். இவர் PEC Ltd நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

மேலும், Public Bus Fleet பிரிவில் ராமையன் தனபாலன் “Merit” விருது வென்றுள்ளார். இவர் SMRT Buses Ltd-ல் பணிபுரிகிறார். அதுபோல், MotorCycle Fleet பிரிவில் ஜம்ரி பி முகமது “Merit” விருது வென்றுள்ளார். இவர் Pizza Hut Singapore Pte Ltd நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

விருது வென்ற அனைவருக்கும் தமிழ் சாகா சிங்கப்பூர் சார்பாக வாழ்த்துகள்!.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts