TamilSaaga

முதியவரிடம் 35,350 வெள்ளி அபேஸ் செய்த “ரவிவர்தன்” : சிங்கப்பூர் போலீசில் சிக்கியது எப்படி?

சிங்கப்பூரில் வாங்கி சம்மந்தப்பட்ட ஒரு மோசடி கும்பலில் இருந்த ஒரு இளைஞர் முதியவர் ஒருவரை மோசடி செய்து சுமார் 35,000 வெள்ளி ஏமாற்றியதாக அவர் மீது சாட்டப்பட்ட குற்றத்தை இன்று செவ்வாயன்று (ஜனவரி 18) சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். சிங்கப்பூரில் செயல்பட்டு வந்த ஒரு மோசடி கும்பலில் இருந்த ஒருவர் சுமார் 5000 வெள்ளி பணத்தை ரவிவர்தன் (வயது 20) என்ற இளைஞரிடம் அளித்துள்ளார். (ரவிவர்தன் தான் மேற்குறிப்பிட்ட முதியவர் வழக்கில் கைதானவர்) குற்றங்கள் நடந்த போது ரவிவர்தன் ITE College Central-லில் 19 வயது மாணவராக இருந்ததாக நீதிமன்றம் கூறியது. மேலும் அவருடன் குற்றம்சாட்டப்பட்டுள்ள நான்கு பேரும் பள்ளி மூலமாகவோ அல்லது அவர்கள் பணிபுரிந்த நிறுவனங்களின் முன்னாள் முதலாளி மூலமாகவோ ஒருவரையொருவர் அறிந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : உங்களிடம் சிங்கப்பூர் Class 3 License உள்ளதா? : நீங்கள் இந்தியாவில் உள்ளவரா? – S Pass, Work Permitல் உடனடி வேலை

அந்த நால்வர் – ரூஃபஸ் ராகேஷ் குமார் கலைசெல்வன்(18), இம்மானுவேல் ரேமண்ட் (19), க்ஷன் பிள்ளை கணேசன் பிள்ளை (20), மற்றும் மகேந்திர சக்கரவர்த்தி சாம்ராஜ் அசோகன் (33) ஆகியோர் ஆவர். கடந்த ஜூலை 2020ன் பிற்பகுதியில், கமிஷனுக்கு ஈடாக S$10,000 பரிமாற்றத்தைப் பெற வங்கிக் கணக்கைப் பெற உதவுமாறு மகேந்திரா என்பவர் க்ஷனிடம் கேட்டுள்ளார். வங்கிக் கணக்கைக் கண்டறிய ரூஃபஸிடம் கே.ஷன் உதவி கேட்க, இறுதியில் ரூஃபஸ் குற்றம் சாட்டப்பட்டவரை அணுகியுள்ளார்.

இறுதியில் ரூஃபஸ் தனது வங்கிக் கணக்கில் S$10,000 பெற்றார். இருப்பினும், அவர் S$5,000 வரை மட்டுமே பணம் எடுப்பதற்கான வரம்பு இருந்ததால், அவர் மீதமிருந்த S$5,000 இம்மானுவேலு கணக்கிற்கு மாற்றினார். ரூஃபஸ் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரூஃபஸின் வங்கிக் கணக்கில் உள்ள க்ஷானின் 5,000 டாலர்களை மோசடி செய்து அதைத் தங்களிடம் வைத்திருக்க திட்டமிட்டனர். ஒரு கட்டத்தில் க்ஷன் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்து, பணத்திற்காக ரூஃப-ஸை மிரட்டத் தொடங்கியுள்ளார். இதனால் பயந்து, ரூஃபஸ் குற்றம் சாட்டப்பட்டவரிடம் இந்த தகவலை கூறியுள்ளார். இறுதியில் தற்போது குற்றம் சாட்டப்பட்டவர் அவரிடம் பணத்தை திரும்ப தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : “வெளிநாட்டு தொழிலாளர்களின் FIN-ஐ பயன்படுத்தி திருட்டு” : சிங்கப்பூர் பெண்ணுக்கு 7 மாத சிறை – தொழிலாளர்களே உஷார்

இதுஒருபுறம் இருக்க குற்றம்சாட்டப்பட்ட ரவிவர்தன் ஜூலை 2020ல், 77 வயது முதியவர் சம்பந்தப்பட்ட ஒரு மோசடி தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டபோது, அவருடைய குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. அந்த முதியவர் ஒரு மோசடி செய்பவரின் வலையில் விழுந்துள்ளார். அவருக்கு வந்த அந்த போலி அழைப்பில் தனது வங்கி அட்டை விவரங்களையும் அவருக்கு அனுப்பிய OTP-களையும் பார்கிந்துள்ளார். இதற்குப் பிறகு, முதியவரின் கணக்கில் 15 அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன, இதில் S$35,350 திருடப்பட்டுள்ளது.

இறுதியில் போலீஸ் விசாரணையில் ரவிவர்தான் மற்றும் அந்த நால்வர் குறித்து கண்டறிந்துள்ளனர். தற்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts