சிங்கப்பூரில் மற்றொரு நபரை பேனாக் கத்தியால் தாக்கியதாகக் கூறப்படும் 30 வயது நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 2) கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் செவ்வாய் மாலை 5.50 மணியளவில் பிளாக் 89 பெடோக் நார்த் ஸ்ட்ரீட் 4-ல் நடந்ததாக சிங்கப்பூர் போலீஸ் படை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணைகளை அடுத்து, போலீஸ் அதிகாரிகள் சந்தேக நபரை ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்தனர் மற்றும் குப்பை தொட்டியில் இருந்து பேனா கத்தியயும் மீட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், தாக்குதலுக்கு உள்ளான அந்த 26 வயதுடைய நபரைத் தாக்கிய அந்த நபருக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர் என்றும். அவரது கழுத்தின் பின்புறத்தில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன, குற்றவியல் சட்டத்தின் 324 வது பிரிவின் கீழ் அந்த 30 வயது ஆடவர் மீது தானாக முன்வந்து ஆபத்தான ஆயுதங்களால் காயப்படுத்திய குற்றத்திற்காக புதன்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது அத்தகைய தண்டனைகளின் கலவை வழங்கப்படலாம்.