TamilSaaga

“சிங்கப்பூரில் போலீசாருடன் மல்லுக்கட்டிய நபர்” : கைது செய்ய “இது” தான் காரணம் – வைரலாகும் வீடியோ

சுமார் எட்டு சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) அதிகாரிகள் ஒரு தனி நபரை பெட்ரோல் நிலையத்தில் வைத்து கைது செய்யும் வீடியோ ஒன்று கடந்த நவம்பர் 2ம் தேதி அன்று ஆன்லைனில் அதிக அளவில் பரவியது.
14-வினாடிகள் ஓடும் அந்த கிளிப் அதிக தகவலை வழங்கவில்லை என்றபோதும், அதிகாரிகள் அந்த நபரை கடுமையாக போராடி தரையில் கொண்டு வந்தது அந்த காணொளியில் தெளிவாக தெரிகின்றது.

மதர்ஷிப்பின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, நவம்பர் 2 அன்று காலை 7:26 மணிக்கு 141 புக்கிட் திமா சாலையில் உதவிக்கான அழைப்பு வந்ததை போலீஸார் உறுதிப்படுத்தினர். 31 வயதுடைய நபர் ஒருவர் ப்ரீதலைசர் பரிசோதனையில் தோல்வியடைந்ததால், அவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்படுவார் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட போது, ​​​​அந்த நபர் அதிகாரிகளை அநாகரீகமாகக் கத்தியதாகவும், அதிகாரிகளை சண்டையிடுமாறு சவால் விடுத்ததாகவும், கைது செய்வதை எதிர்த்ததாகவும் கூறப்படுகிறது. அவரை கட்டுப்படுத்த தேவையான பலம் பயன்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசாருடன் மல்லுக்கட்டிய நபர் – Video Courtesy District Singapore Facebook Channel

அந்த நபர் போலியான தகவல்களை அதிகாரிகளுக்கு வழங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் அவர் நான்கு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார்: குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், பொது ஊழியரைத் தவறான வார்த்தைகளால் திட்டியது. பொது ஊழியரை தனது கடமையைச் செய்யவிடாமல் தடுக்க முயன்றது மற்றும் பொது ஊழியருக்கு தவறான தகவல்களை வழங்குதல் உள்ளிட்ட குற்றங்கள் அடங்கும்.

தற்போது இந்த வழக்கில் போலீஸ் விசாரணைகள் மேற்கொண்டு நடந்து வருகின்றன.

Related posts