TamilSaaga

கொரோனா காலத்தில் திறம்பட செயல்பட்டது யார் ? – சிங்கப்பூரா? – துபாயா?

கொரோனா நோய்தொற்று காரணமாக உலக அளவில் பலவிதமான மாற்றங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக “வீட்டிலிருந்தபடியே வேலை செய்வது” என்ற ஒரு புதிய வேலைசெய்யும் அணுகுமுறையை இந்த நோய்த் தொற்று அறிமுகப்படுத்தியுள்ளது.

நோய் தொற்று காரணமாக ஊழியர்கள் பாலியில் இருந்தாலும் சரி, பார்சிலோனாவில் இருந்தாலும் சரி, ஜூம் மீட்டிங் துணைகொண்டு தங்கள் பணிகளை முடித்துக் கொடுக்கும் சூழ்நிலையில் பலர் உள்ளனர். எனினும் இந்த வசதி ஒரு குறிப்பிட்ட தொழிலாளர் வர்க்கத்தை மட்டுமே அதாவது, வெள்ளை காலர் தொழிலாளர்களை மட்டுமே ஊக்குவிப்பதாக அமைகிறது.       

இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் கிராஞ்சியில் காண்போரை ஆச்சர்யப்படுத்தும் Cai Shen சிலை – இரண்டாவது மாடியில் ஏற்றியது எப்படி?                                                                                              

சிங்கப்பூரில் உள்ள உயர்மட்ட ஊழியர்களுக்கு சர்வதேச பயணம் என்பது இந்த சூழ்நிலையிலும் மிக எளிதான ஒரு விஷயம் என்பதைப் போல் தான் தோற்றமளிக்கிறது. வீட்டில் இருந்தே வேலை செய்வது என்ற அணுகுமுறை இந்த உலகத்தையே சுருக்கி விட்டது போல்  நினைக்கவும் தோன்றுகிறது.

மேலும், இந்த நோய் தொற்று காரணமாக  பல உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளும் அதிகம் உருவாகியுள்ளதாகவும் பல கருத்து கணிப்புகள் கூறுகின்றன. குறிப்பாக, செப்டம்பர் 2020-ல், சிங்கப்பூர் அரசு, வெளிநாட்டு நிபுணர்களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளத்தை உயர்த்தியது. முதல் முறையாக, சிங்கப்பூர் அரசு ஒரு துறை சார்ந்த குறைந்தபட்சத்தை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

நிதிச் சேவைகளில் தொடர்புடைய புதிய வெளிநாட்டு பணியாளர்களுக்கு மாதம் குறைந்தபட்ச ஊதியமாக ஒவ்வொரு மாதமும் $3700 கொடுக்க வேண்டும். மேலும், 2020 ஆம் ஆண்டு முதல், பணி அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள், விசாவுடன் சேர்த்து, மீண்டும் நுழைவதற்கு அனுமதியும் தேவைப்பட்டது. இந்த கொரோனா காலக்கட்டத்தில் சிங்கப்பூர் அரசின் இத்தகைய நடவடிக்கைகள் பல வெளிநாட்டவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிருப்தியின் காரணமாக சிங்கப்பூரின் மொத்த வெளிநாட்டு பணியாளர்கள் அதாவது பிலிப்பினோ வீட்டுப் பணியாளர்கள் முதல் பிரென்ச்  முதலீட்டாளர்கள் வரை 16 சதவீதம் குறைந்து தற்போது 1.2 மில்லியனாக இருப்பது கருத்துக் கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக வெளிநாட்டை சேர்ந்த உயர்பதவிகளில் இருக்கும் வெள்ளை காலர் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் 14 சதவிகிதம் குறைந்து 167,000 ஆக குறைந்துள்ளது என்றும் அந்த கருத்துக் கணிப்பு தெரிவித்துளளது.

சிங்கப்பூருக்கு நேர் எதிரோக துபாய், தனது அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றியுள்ளது. துபாய் தன்னை ஒரு டிஜிட்டல் நாடாக விளம்பரப்படுத்துகிறது.

கடற்கரையிலிருந்து பணிபுரிவது போன்ற மெய்நிகர் வேலைத்திட்டத்தை சுமார் 611 மில்லியன் டாலர் செலவில் அறிமுகப்படுத்தி வெளிநாட்டவரின் ஆதரவை அதிகமாக பெற்று வருகிறது. மேலும், அமீரக குடியுரிமைக்கான தனது அணுகுமுறைகளையும் மாற்றியுள்ளது . இதில் மருத்துவர்கள், கலைஞர்கள், மற்றும் அறிவில் சிறந்தவர்களுக்கு , குறிப்பாக அந்நாட்டை தாய் நாடாக கொள்ளாதவர்களுக்கு  குடியுரிமை வழங்குவதும் பாஸ்போர்ட் வழங்குவதும் 50 ஆண்டு கால வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

துபாய், சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும் உயர்மட்ட தொழிலாளர்களுக்கு பல சலுகைகளை அளித்து மாறுபட்ட அணுகுமுறைகளை மேற்கொண்டு வரும் இதே சூழலில், இரு நாடுகளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் ஒரே மாதிரியான அணுகுமுறையையே வெளிப்படுத்தி வருகிறது.

சிங்கப்பூரில் கொரோனா நோய் தொற்று என்பது முதலில் ஒரு பெரிய அளவில் வெளிப்பட்ட இடங்கள் என்று பார்த்தால், அவை புலம்பெயர்ந்த கட்டுமான மற்றும் உற்பத்தி தொழிலாளர்களுக்கான தங்குமிடங்கள் மற்றும் அந்த தொழிலாளர்கள் வசித்து வரும் நெரிசலான இடங்கள் என்றே கூற வேண்டும்.

நோய்த்தொற்று ஒரு அளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும்,  மற்ற மக்களை விட,  அதிகமாக பாதிக்கப்படுவது மற்றும் பலவிதமான கட்டுப்பாடுகளுடன் பணி செய்வது போன்ற சுமைகள் இத்தகைய அடிமட்ட தொழிலாளர்கள் மீது திணிக்கப்படுகின்றன என்பதே ஒரு நிதர்சனமான உண்மை.

குறிப்பாக, துபாயில், 2020 ஆம் ஆண்டில் பொருளாதாரம் வெகுவாக சரிந்து விட்ட நிலையில், தொழிலாளர்கள் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆண்கள் பணமில்லாமல், வேலை இழந்து தொழிலாளர் முகாம்களில் பட்டினி கிடப்பதாக பல அறிக்கைகள் வந்தன.

அதேவேளையில், சிங்கப்பூர் மற்றும் துபாய் இரண்டுமே பெரும் பணக்காரர்களுக்கு புகலிடமாக மாறியது.சிங்கப்பூரில் 2019-ல் 1000-லிருந்த செல்வந்தர்களின் எண்ணிக்கை 2020-ல் 1300 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் அமீரகத்தில் உள்ள அதிபணக்காரர்களின் எண்ணிக்கை சுமார் 400-லிருந்து 700-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. 

இருப்பினும், சிங்கப்பூர் மற்றும் துபாய் இரண்டுமே வெளிநாட்டு தொழிலாளர்களை அதிகம் நம்பியுள்ளது என்பது தான் உண்மை. குறிப்பாக, துபாயின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 90% வெளிநாட்டினர். ஆனால் சிங்கப்பூரில் 27% வெளிநாட்டினர் உள்ளனர். இதில் சிங்கப்பூர் புலம்பெயர்ந்தவர்களின் குறிப்பாக, வாங்குபவர்களின் சந்தையாகக் கருதப்படுகிறது. வெளிநாட்டினரைப் பெரிதும் புறக்கணிக்கும் மற்றும் தனது சொந்த மக்களுக்கு முதலிடம் கொடுக்கும் பொதுக் கதையை அரசாங்கம் ஊக்குவிக்கிறது.

சிங்கப்பூர் மீண்டும் வெளிநாட்டு திறமைகளை ஈர்த்தாலும், அது வெவ்வேறு இடங்களில் இருந்து வரலாம். தொற்றுநோய்களின் போது சிங்கப்பூரின் சுயாதீன பள்ளிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் வேலைவாய்ப்புகள் சரிந்தன. ஆனாலும், ஆசியாவின் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரின் திறமைகளை அதிகம் ஈர்க்கும் வாய்ப்புகள் சிங்கப்பூருக்கு உள்ளன.

இதையும் படியுங்கள் : சீன புத்தாண்டு 2022: சிங்கப்பூரில் தமிழர்களுக்கு இணையாக ஆதிக்கம் செலுத்தும் சீனர்கள் – வியக்க வைக்கும் வரலாறு

இதற்கு நேர்மாறாக, அமீரகம் மத்திய கிழக்கில் மேற்கு நாடுகளின் விருப்பமான பங்காளியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் தனது உறவுகளை பலப்படுத்திக்கொள்ள அதிக முனைப்புடன் செயல்படுகிறது. சிங்கப்பூர் நீண்ட காலமாக ஆசியாவில் ஒரு விதிவிலக்காகக் காணப்பட்டது. குறிப்பாக அதன் போட்டியாளரான ஹாங்காங் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தடைசெய்யப்பட்ட தாலும், சிங்கப்பூரின் பொருளாதார பின்னடைவு, செயல்திறன் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை வெளிநாட்டவரை அதிகம் ஈர்க்கும் வகையில் இருப்பதாகவே உள்ளது.   இந்நிலையில், துபாய் தான் உண்மையான உலக நகரமாக தன்னை காட்டிக் கொள்கிறது. ஆனால் உலகின் பெரும்பாலான வெளிநாட்டவர்களுக்கு, எதிர்காலம் சிங்கப்பூரை ஒத்திருக்கும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts