சிங்கப்பூரில் செவிலியர்களின் பணிச்சுமையை குறைக்க புதிய இயந்திரம் ஒன்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த இயந்திரத்தின் உதவியுடன் தானாகவே தடுப்பூசி மருந்துகளை ஊசிகளில் நிரப்ப முடியும் என்பது தான் சிறப்பம்சம். இது அயராது உழைக்கும் நமது செவிலியர்களின் வேலைச்சுமையை பெருமளவு குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் முதன்முறையாக பயன்படுத்தப்படும் AVID (Automated Vaccine Inoculation Dispenser) எனப்படும் இந்த தானியங்கி தடுப்பூசி அமைப்பு 25 கிலோவுக்கும் குறைவான எடை கொண்டது.
ஐந்து நிமிடங்களுக்குள் ஆறு தடுப்பூசி ஊசிகளை நிரப்ப இந்த இயந்திரத்தால் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த புதுமையான தீர்வு ரோபோ பாகங்கள், ஸ்மார்ட் சென்சார்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் கலவையைப் பயன்படுத்தி செயல்படுகின்றது. ஒரு செவிலியர் ஆறு சிரிஞ்ச்களை கைமுறையாக நிரப்புவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் மாறுபடும். மேலும் நர்ஸ் எவ்வளவு அனுபவம் வாய்ந்தவர் மற்றும் எவ்வளவு சோர்வாக இருக்கிறார் போன்ற காரணிகளால் அந்த பணி பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த அமைப்பு செவிலியர்களின் பணிச்சுமையைக் குறைக்கிறது மற்றும் ஊசி மருந்துகளை கைமுறையாக நிரப்புவதற்கான தேவையை நீக்குகிறது. தடுப்பூசிகளைப் பெறும் நபர்களுடன் அக்கறை மற்றும் தொடர்புகொள்வதில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது. இது மனித புழக்கத்தின் சாத்தியத்தையும் குறைக்கிறது.
தற்போது இந்த இயந்திரம் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை நிரப்ப பயன்படுகிறது ஆனால் மற்ற தடுப்பூசிகளை நிரப்ப இவை மாற்றியமைக்கப்படலாம். கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் Senja-Cashew சமூக கிளப்பில் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்ட இது இப்பொது தீவு முழுவதும் ஏழு தடுப்பூசி மையங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. AVID, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஏ*ஸ்டார்) மேம்பட்ட மறு உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மையம் மற்றும் சிங்கப்பூர் இன்ஸ்டிடியூட் ஆப் உற்பத்தித் தொழில்நுட்பம், உள்ளூர் அமைப்புகள் ஒருங்கிணைப்பாளர் சிஸ்மாடிக் குளோபல் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டது.