TamilSaaga

“சிங்கப்பூரில் சீக்கியர்களின் வாழக்கை” – அற்புதமாக எடுத்துக்காட்டும் கண்கவர் கண்காட்சி

சிங்கப்பூர் என்பது பல கலாச்சாரங்கள் ஒன்றாக இணைந்து வாழ்கின்ற ஒரு சொர்கத்தீவு என்பது உலக அளவில் பலர் அறிந்த உண்மை. இந்நிலையில் சிங்கப்பூரில் சீக்கிய மக்களின் வாழ்கை குறித்து சிங்கப்பூரில் உள்ள கலைஞர் கீரத் கவுரின் சமீபத்திய ஓவியங்கள் சில சீக்கியர்கள் – இந்திய பாரம்பரிய மைய கண்காட்சிக்கு சொல்லப்படாத ஒரு கதையை கூறியுள்ளது. சிங்கப்பூரில் உள்ள சீக்கிய சமூகத்தின் ஒரு பார்வையை இந்த ஓவியங்கள் அளித்துள்ளது.

சிங்கப்பூர் என்னும் அழகிய தீவில் உள்ள பல சமூகத்தின் அடையாளத்தில் உள்ள பல்வேறு அம்சங்களை எடுத்துக்காட்டும் கண்காட்சியின் சில எடுத்துக்காட்டுகள் தான் இவை. சிங்கப்பூருக்கு புலப்பெயர்ந்த மக்கள் தங்கள் குடும்பங்களுக்கு கற்றல் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான வளமான சூழலை உருவாக்க இரவும் பகலும் உழைக்கிறார்கள்.

இது சிங்கப்பூரில் உள்ள அனைத்து சீக்கிய புலம்பெயர் சமூகங்களிடையேயும் உள்ளது என்றும் இது தான் இந்தத் திட்டத்துடன் நான் அதிகம் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள கரணம் என்று கலைஞர் Keerat Kaur கூறுகிறார். அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அவரது கலைப்படைப்புகளைப் பார்க்க அனைத்து சிங்கப்பூரர்கள் மற்றும் PRகளுக்கு அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts