பண்டிகை நாட்களில் குறிப்பாக இன்று சிங்கப்பூரில் கொண்டாடப்படும் சீன புத்தாண்டின்போது பரிசு பொருட்களாக வழங்கப்படும் பாரம்பரிய சிவப்பு பாக்கெட்டுகளை விட தற்போது QR பரிசு அட்டைகளைத் தேர்ந்தெடுக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக DBS வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் ஊழியர்களுக்கு சிறப்பு பணம் வழங்க விரும்பும் நிறுவனங்கள் இத்தகைய QR பரிசு அட்டைகளைப் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த 2020ம் ஆண்டு, சீனப் புத்தாண்டையொட்டி (CNY) ஐந்து நிறுவனங்கள் மட்டுமே DBS வங்கியின் QR பரிசு அட்டைகளை ஏற்றுக்கொண்டன. 2021ல் இந்த எண்ணிக்கை 37 இருந்தது, தற்போது 2022ம் ஆண்டில், பல்வேறு தொழில்களில் மொத்தம் 71 நிறுவனங்கள் CNY-க்காக QR பரிசு அட்டைகளைப் பயன்படுத்துகின்றன என்று ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது DBS.
மதர்ஷிப்பின் கேள்விகளுக்கு பதிலளித்த சில நிறுவனங்கள், QR கிஃப்ட் கார்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் அது பசுமை புரட்சிக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. துப்புரவு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான LS 2 சர்வீசஸ், தங்களுடைய பெருநிறுவன சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக நிலையான வாழ்க்கையை ஒருங்கிணைத்துள்ளதாகக் கூறியது. ரியல் எஸ்டேட் நிறுவனமான ERA Realty Network, புதிய நோட்டுகள் மற்றும் சிவப்பு பாக்கெட்டுகளை அச்சடிப்பதில் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிந்த பிறகு, வங்கி நோட்டுகள் மற்றும் சிவப்பு பாக்கெட்டுகளின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும் என்று கூறியுள்ளது.
கோவிட்-19 உடன் சிறிது காலம் வாழ்ந்ததன் விளைவாக, சிங்கப்பூரில் உள்ளவர்கள் தங்கள் தொலைபேசிகளில் QR குறியீடு ஸ்கேனரைப் பயன்படுத்துவதற்குப் பழகிவிட்டனர். மேலும் பலர் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு மாறியுள்ளனர் என்பது நிதர்சமான உண்மை. Shopeeயில் ஆன்லைன் ஸ்டோரைத் தொடங்கிய உணவு உற்பத்தியாளர் ஈபி ஃபுட், தொற்றுநோய்க் காலத்தில் Contact Less Payment மற்றும் இ-காமர்ஸின் பயன்பாடு அதிகரிப்பது மக்களை E-Ang Poaகளுக்கு அதிக வரவேற்பை அளித்துள்ளது என்றார்.
கார்ப்பரேட் நிறுவனங்களிடையே வளர்ந்து வரும் இந்த போக்குக்கு பதிலளிக்கும் வகையில், DBSன் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் சந்தைப் பகுதியின் நுகர்வோர் வங்கியின் தலைவர் டயான் சாங் பேசுகையில், அதிகமான வாடிக்கையாளர்கள் QR வகை பரிசை “பாதுகாப்பான, வசதியான மற்றும் மிகவும் நிலையான மாற்றாக” பாராட்டியுள்ளனர். அதே நேரத்தில் இது நமது அர்த்தமுள்ள பாரம்பரியத்தை பாதுகாக்கிறது என்றும் அவர் கூறினார்.
QR பரிசளிப்பதைத் தேர்ந்தெடுப்பதில் அதிக நிலைத்தன்மை உணர்வுள்ள கார்ப்பரேட்டுகளைக் கண்டு வங்கி மகிழ்ச்சி அடைகிறது என்று சாங் கூறினார். பண்டிகைக் காலங்களுக்கு அப்பால், டவுன்ஹால் பரிசுகள் மற்றும் ஊக்கத் திட்டங்கள் போன்ற பிற சந்தர்ப்பங்களில் DBS QR கிஃப்டைப் பயன்படுத்த நிறுவனங்களை ஊக்குவிக்கின்றன என்று தெரிவித்தார்.