TamilSaaga

“கொஞ்சம் சிரமம் தான்” : சிங்கப்பூரில் மார்ச் முதல் அனைத்து டாக்ஸி ஆபரேட்டர்களும் கட்டணத்தை உயர்த்த திட்டம்!

சிங்கப்பூரில் பிரபல டாக்ஸி நிறுவனமான ComfortDelGro வரும் மார்ச் 1ம் தேதி முதல் தங்கள் சேவைக்கான கட்டணத்தை உயர்த்தும் முடிவை எடுத்தது. அந்த முடிவைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் உள்ள மற்ற அனைத்து டாக்ஸி ஆபரேட்டர்களும் அடுத்த மாதம் முதல் இதைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பொது போக்குவரத்து கவுன்சில் (PTC) நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 25) அன்று மற்ற ஆபரேட்டர்கள் தங்கள் கட்டணத்தை மார்ச் மாதத்தில் உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

Work Permit Holders-ன் பாரத்தை குறைத்த சிங்கப்பூர் அரசு.. SHN கட்டணம் குறைப்பு – அதிலும் காசு பார்த்த சில முதலாளிகளுக்கு “நெத்தியடி”

விலையேற்றம் செய்யவுள்ள டாக்ஸி ஆபரேட்டர்கள் விவரம் பின்வருமாறு : ஆபரேட்டர்கள் டிரான்ஸ்-கேப், பிரைம் டாக்ஸி, பிரீமியர் டாக்ஸி, ஸ்ட்ரைட்ஸ் டாக்ஸி மற்றும் yellow top டாக்சிகள், இவை ஓட்டுநர்களுக்குச் சொந்தமானவை மற்றும் சுயாதீனமாக இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. “PTC அவர்களின் கட்டண உயர்வைக் குறிப்பிட்டது மட்டுமல்லாமல் புதிய கட்டணங்கள் குறித்து குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு முன்னதாகவே பயணிகளுக்கு தெரிவிக்குமாறு ஆபரேட்டர்களுக்கு நினைவூட்டியுள்ளது” என்று கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

சிங்கப்பூரில் அதிக அளவிலான டாக்ஸிகளை இயக்கும் ComfortDelGro – இந்த மாத தொடக்கத்தில் அதன் முழுக் கட்டணத்தை 20 காசுகள் உயர்த்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு வந்துள்ளது. சிங்கப்பூரை பொறுத்தவரை ComfortDelGro க்குப் பிறகு சிங்கப்பூரின் இரண்டாவது பெரிய டாக்ஸி ஆபரேட்டர் என்று கருதப்படும் Trans-Cab நிறுவனத்திடம் சுமார் 2,400 வண்டிகள் உள்ளன. இந்நிலையில் அதன் Renault Latitude மற்றும் Toyota Prius வண்டிகளில் கட்டணங்கள் S$3.90லிருந்து S$4.10 ஆக உயரும் என்று அறிவித்துள்ளது.

“எங்க இன்னும் மாப்பிள்ளையை காணும்” : சிங்கப்பூருக்கு பெண்ணுக்கு இருமுறை தடைபட்ட கல்யாணம் – ஏன்? TikTokல் அவரே வெளியிட்ட விளக்கம்

1998ம் ஆண்டு முதல் டாக்ஸி கட்டணங்கள் கட்டுப்பாடு நீக்கப்பட்ட நிலையில், டாக்ஸி மற்றும் தனியார் வாடகை ஆபரேட்டர்கள் கட்டண மாற்றங்களை PTC க்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்பது “சிறந்த வெளிப்படைத்தன்மை மற்றும் மேற்பார்வைக்கு அனுமதிக்கிறது” என்று கவுன்சில் கூறியுள்ளது. மேலும் இந்த விலையேற்றம் மார்ச் 8 முதல் அமலுக்கு வருகின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts