TamilSaaga

இந்தியாவில் இருந்து நீங்கள் 45 நாட்களில் ஏஜண்ட்டுக்கு பணம் கொடுக்காமல் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்வது எப்படி?

சிங்கப்பூர் என்பது மிகவும் வளர்ச்சியடைந்த ஆசிய நாடுகளுள் ஒன்று. பல துறைகளில் இந்த நாடு சிறந்து விளங்கி வருகிறது. வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலை வாய்ய்பு அளிப்பதிலும் இந்த நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு தினம் தோறும் நடக்கும் வளர்ச்சிகள் உள்கட்டமைப்பு வசதி முன்னேற்றங்கள் என அனைத்திற்கும் பல தொழிலார்கள் மற்றும் ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். அதனால் இங்கு வேலை வாய்ப்புகள் அதிகம். அதற்காக வெளிநாட்டு மக்கள் வேலைக்கு அழைக்கப்படுகின்றனர்.

இது போல் சிங்கப்பூர் வரும் பலர் ஏஜெண்டுகள் மூலமாகவும் சிலர் நேரடியாக கம்பெனிகள் மூலமாகவும் வருகின்றனர். ஏஜெண்டுகள் மூலமாக வரும் ஊழியர்கள் அவர்களுக்கு பணம் செலுத்த வேண்டி இருக்கும். அதாவது லட்சக்கணக்கான ரூபாய் பணம் செலுத்தப்படுகிறது. பலருக்கு பணம் செலுத்தி வேலை கிடைத்தாலும் சில பொய்யான ஏஜெண்ட்டுகள் மூலம் பலர் ஏமாற்றப்படுகின்றார்.

இது போன்ற பிரச்சனைகள் எதுவும் நேராமல் வெறும் 45 நாட்களுக்குள் உங்கள் சொந்த முயற்சியில் உங்களுக்கான ஒரு நல்ல வேலையை சிங்கப்பூரில் நீங்கள் அமைத்துக் கொள்ள முடியும். அதுகுறித்த தகவல்களை முழுமையாக அறிந்துகொள்ள இந்த பதிவை முழுதாக படியுங்கள்.

முதலில் உங்கள் சொந்த முயற்சியில் வேலை தேட முதல் தேர்வு இணையதளம். உலகம் முழுவதும் இணையமயமாகி மாறிவிட்ட இந்த காலத்தில் பல வேலைவாய்ப்பு தளங்கள் உள்ளன. அதன் மூலம் உங்களுக்கான வேலைகளைத் தேடி அதற்காக விண்ணப்பிக்கலாம்.

கீழ்காணும் இணையதளங்களை பயன்படுத்தி உங்களுக்கான வேலைகளைத் தேடுங்கள்!

1. Indeed
2. LinkedIn
3. Job Street
4. JobsDB
5. My Careers Future
6. Job Central

அடுத்ததாக உங்களுக்கு ஏதேனும் கம்பெனிகள் தெரிந்திருந்தால் அதன் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் நீங்கள் விண்ணப்பிக்கலாம். பெரும்பாலும் புகழ்பெற்ற MNC-க்கள் Executive மற்றும் Engineer லெவல் வேலைகளுக்கு ஆட்களை தொடர்ந்து வேலைக்கு எடுப்பர். அதனால் உங்களுக்கு தெரிந்த MNC-க்களில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இதற்க்கு உங்கள் சுயவிவரங்கள் மற்றும் உங்கள் அனுபவாங்கல் போன்றவை சரியாக இருக்க வேண்டியது அவசியம். அனைத்தையும் சரியான முறையில் தயார் செய்த பின் விண்ணப்பிக்கவும்.

மூன்றாவதாக உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் சிங்கப்பூரில் இருந்தால் அவர்கள் மூலம் நீங்கள் விண்ணப்பிக்கலாம். ஒருவேளை உங்களுக்கு தெரிந்தவர்கள் பணிபுரியும் கம்பெனியில் வேலை வாய்ப்புகள் இருந்தால் அவர்களின் உதவியுடன் நீங்கள் விண்ணப்பிக்கலாம் அதற்கும் அந்த நிறுவனத்தின் இணையவழி சேவையை உபயோகிப்பது அவசியம். கடைநிலை ஊழியர்கள் அங்கு உள்ள வேலை வாய்ப்பு ஏஜென்சிகளில் உங்களுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு உங்களுக்கு தெரிந்த நபரிடம் உதவி கோரலாம். அல்லது உங்களுக்காக பரிந்துரை செய்யுமாறு கேட்கலாம்.

மேற்கண்ட மூன்று முறைகளைப் பயன்படுத்தி நீங்கள் உங்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம். இதில் மிக முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டிய காரியம் உங்கள் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். வேலை விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்ட வேலை நிறுவனம் உங்களை தொடர்பு கொள்வர். பின்னர் அவர்கள் கேட்கும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அதாவது உங்களது பாஸ்போர்ட் விபரங்கள், முகவரி, கல்வி மற்றும் அனுபவ விவரங்கள் முதலியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இந்த செயல்முறை குறித்து விரிவாக அறிந்துகொள்ள கீழ்கண்ட லிங்க்-கைப் பயன்படுத்தவும்.

https://tamilsaaga.com/sg/necessary-documents-to-get-work-permit-in-singapore/ 

அனைத்து விபரங்களும் சரியாக இருப்பின் உங்களுக்கான விசா விண்ணப்பம் உங்கள் கம்பெனி அல்லது அங்கு உள்ள ஏஜெண்ட்டுகள் மூலம் சமர்ப்பிக்கப்படும். இந்த ஏஜெண்டுகள் நேரடியாக தொழிலாளர்களிடமிருந்து பணம் பெறுவதில்லை. அவர்களுக்கான தொகை வேலை நிறுவனம் மூலம் செலுத்தப்படும். எனவே கவலை வேண்டாம்.

உங்கள் விசா விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் உங்களுக்கான IPA வழங்கப்படும். அதனைக் கொண்டு நீங்கள் சிங்கப்பூருக்கு வரலாம். இங்கு வந்த பின்னர் உங்களுக்கான ஆவணங்கள் Onboarding Centre-ல் சரிபார்க்கப்பட்டு வேலை விசா வழங்கப்படும்.

இது தவிர TEP – Training Employment Pass மற்றும் TWP- Training Work Permit போன்ற இரண்டு விசாக்கள் மூலம் நீங்கள் சிங்கப்பூர் வர இயலும். இவை இரண்டும் குறுகியகால பணி மற்றும் நிகழ்நேர பயிற்சிக்காக கொடுக்கப்படும் விசாக்கள் ஆகும். இதன்மூலம் மிக குறுகிய காலத்திலேயே நீங்கள் சிங்கப்பூர் வரலாம். முறையான பயிற்சிகளை முடித்த பின்னர் உங்களுக்கான வேலையை நிரந்தரமாக அமைத்துக் கொள்ளலாம்

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி வெறும் 45 நாட்களில் உங்களுக்கான வேலையை சிங்கப்பூரில் நீங்கள் பெறலாம். விண்ணப்பம் செய்யும் முன் அந்த கம்பெனி குறித்த விவரங்கள் மற்றும் அங்கு உள்ள வேலை கலாச்சாரம் போன்றவற்றை நன்கு அறிந்துகொள்ளவும். நீங்கள் விண்ணப்பிக்கும் வேலைக்கான பொறுப்புகள் மற்றும் உங்கள் வேலை முறைமைகளைக் குறித்து அறிந்துகொள்ளவும். வேலைக்கு எப்படி சரியான முறையில் விண்ணப்பிப்பது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்கள் நமது தமிழ் சாகா பக்கத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது. கீழே உள்ள லிங்க்-கைப் பயன்படுத்தி மேலும் தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.

https://tamilsaaga.com/news/how-to-apply-for-a-job-effectively/ 

முக்கியக் குறிப்பு நீங்கள் வேலைக்கு விண்ணப்பிக்கும்பொழுது ஒரு நிறுவனத்தில் மட்டுமே விண்ணப்பித்து காலம் கடத்தாமல் ஒன்றிற்கும் மேற்பட்ட கம்பெனிகளில் உங்களுக்கு ஏற்ற வேலைக்கு விண்ணப்பித்திடுங்கள். ஒன்று நிராகரிக்கப்பட்டாலும் மற்றொன்றிக்கான வாய்ப்பு காத்திருக்கும். நிராகரிப்பைக் குறித்து கவலைப்படாமல் உங்களுக்கான வேலைகளை தொடர்ந்து தேடுங்கள். உங்களுக்கான வாய்ப்பு எப்பொழுதும் உங்களுக்காக காத்திருக்கும்!

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts