சுமார் ஒரு மாத காலத்திற்கு பிறகு தற்போது தான் மீண்டும் சிங்கப்பூரின் VTL திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு செயலாற்றி வருகின்றது. ஆனால் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் வரும் விமானங்கள் குறிப்பாக திருச்சி மற்றும் சிங்கப்பூர் என்று இருமார்கமாக இயக்கப்படும் விமானங்கள் அவ்வப்போது ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
நேற்று திருச்சி சிங்கப்பூர் மார்க்கமாக 8 பிப்ரவரி 2022 மற்றும் 10 பிப்ரவரி 2022 அன்று இயக்கப்படவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. அதேபோல சிங்கப்பூரில் இருந்து 9 பிப்ரவரி 2022 மற்றும் 11 பிப்ரவரி 2022 ஆகிய தேதிகளில் திருச்சி செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. இந்த வரிசையில் பிப்ரவரி மாதம் 5ம் தேதி திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்புகள் பயணிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ரத்து செய்வதற்கான காரணம் என்னவென்று தற்போது வரை தெரியவில்லை. இந்த ரத்து சம்மந்தமான காரணம் குறித்து நந்தனா ஏர் டிராவல்ஸ் நிறுவனம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வாடிக்கையாளர் சேவை மையத்திடம் கேட்டபோது “Flight Operation” தொடர்பான சிக்கல் இருப்பதாகவும் கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுவரை பிப்ரவரி 5, 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் (இந்த விமானம் துபாய்க்கு செல்வதால் அந்த துபாய் பயணமும் ரத்தாகியுள்ளது) அதேபோல சிங்கப்பூரில் இருந்து திருச்சி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் வருகின்ற பிப்ரவரி மாதம் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது நினைவுகூரத்தக்கது.