TamilSaaga

“தமிழர் உள்பட பிற வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிய சிங்கப்பூர் SNA அதிகாரிகள்” – MP ஜோஸ்பின் நடத்திய பாராட்டு விழா

சிங்கப்பூர்.. VTL விண்ணப்பங்களின் ஒதுக்கீடு : “அதை” பொறுத்துதான் அளிக்கப்படும் – High Commissioner வெளியிட்ட முக்கிய Update

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் “மற்றவர்களுக்கு நாம் உதவ செலவிடும் நேரம் என்பது ஒருபோதும் வீணான பொழுதுகளாக ஆகாது”, என்ற இந்த வார்த்தைகள் கடந்த 2021ம் ஆண்டிற்கான எங்களின் ஸ்டார் ஸ்மார்ட் நேஷன் தூதர்களில் ஒருவரான கீத் பி. கார்டரின் வார்த்தைகள் ஆகும் என்றார் அவர். எங்கள் தன்னார்வத் தொண்டர்களின் உணர்வை உண்மையிலேயே சுருக்கிக் கூறுகின்றன, கடந்த 2 ஆண்டுகளில், Smart Nationனில் எங்கள் பார்வையில் நம்பிக்கை கொண்ட சுமார் 4,000 SNA களைக் கொண்ட சமூகத்தை நாங்கள் உருவாக்க முடிந்தது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

திருமதி பிரதிபா உள்ளிட்ட SNA தொண்டர்கள் இந்த நிகழ்வு குறித்து விலகிய காணொளி

கடந்த 2020ம் ஆண்டு சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த வெளிநாட்டு ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு நடுவில் தங்களுடைய பணிகளை மேற்கொண்டு வந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. அப்பொழுது தங்கும் விடுதிகளில் இருந்து 5000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள், தங்களது பணிகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். ஆயினும் தங்கள் அலைபேசியில் உள்ள செயலியின் மூலம் தங்களுடைய உடல் வெப்ப நிலையை அவர்கள் தெரிவிக்க வேண்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

“சிங்கப்பூர் Tampines பகுதியில் தீ” : மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட பெண் – 280 பேர் உடனடியாக வெளியேற்றம்

ஆனால் அந்த செயலி முழுவதும் ஆங்கிலத்தில் இருந்ததால் மொழி தெரியாத சில வெளிநாட்டு ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நமது SNA தொண்டர்கள் மிகுந்த கவனத்துடன் செயலாற்றினார். குறிப்பாக திருமதி. பிரதிபா சிறப்பாக செயல்பட்டு தனது சக ஊழியர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி SNA குழுவுடன் இணைந்து வழிகாட்டு நெறிமுறைகளை விளக்கும் காணொளிகளை தமிழ், வங்காளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட்டனர்.

தொற்று நோய் சிங்கப்பூரில் உச்சத்தில் இருந்த அந்த காலகட்டத்தில் இது போன்ற பல உதவிகளை நமது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கிய திருமதி பிரதிபா உள்பட 4 பேருக்கு அறிவார்ந்த தேசத்துக்கான நட்சத்திர விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts