தற்போது சிங்கப்பூர் மற்றும் இந்தியா (குறிப்பாக தமிழகம்) இடையே VTL மற்றும் NON VTL சேவைகள் என்று எந்தவித பாகுபாடும் இல்லாமல் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இரு நாட்டு எல்லை கட்டுப்பாடுகளும் தளர்வடைந்துள்ள இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே நிலை தற்போது அமலில் உள்ளது என்றே கூறலாம்.
இந்நிலையில் சிங்கப்பூர் மற்றும் திருச்சி மார்கமாக இந்த ஏப்ரல் மாதத்தில் கூடுதல் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது ஏர் இந்தியா எக்ஸ்ப்ரெஸ். தற்போது வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ தகவலின் அடிப்படையில் இந்த ஏப்ரல் மாதத்தில் வாரம்தோறும் புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 5.30 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு திருச்சிக்கு ஒரு விமானமும். அதே போல மாலை 5 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு திருச்சிக்கு 6.40க்கு ஒரு விமானமும் புறப்படவுள்ளது.
இதை தவிர சிங்கப்பூர் மற்றும் திருச்சி மார்கமாக செவ்வாய் கிழமை ஒரு விமானம் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஏப்ரல் மாதத்தின் அனைத்து நாட்களிலும் திருச்சி மற்றும் சிங்கப்பூர் மார்க்கமாக தினமும் ஒரு விமானம் இயக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
VTL மற்றும் NON VTL என்ற பாகுபாடு இல்லாமல் பயணிகள் இனி எளிதில் விமான டிக்கெட்களை முன்பதிவு செய்து இருநாடுகளுக்கு இடையே பயணிக்கமுடியும். ஏப்ரல் 1ம் தேதி முதல் சிங்கப்பூர் அரசும் தனது எல்லை கட்டுப்பாடுகளில் தளர்வு அளித்துள்ளது.
விமான டிக்கெட் சேவைகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
9600 223 091