அண்டை நாடான இந்தியா தற்போது ஒருமுறை (Single Use) மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை தடை செய்ய முடிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 1 முதல் இந்தியாவின் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக இந்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று கூறியுள்ளது.
ஆனால் இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவு மாசுபாட்டைக் குறைக்க இந்த பிளாஸ்டிக் தடை மட்டும் போதாது, என்று இந்திய நிபுணர்கள் CNBC-யிடம் அளித்த பேட்டியில் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சரி இந்திய நகரங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க சிங்கப்பூர் எந்தவித உதவ உள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.
“இந்தியாவில் உள்ள 4,000க்கும் மேற்பட்ட நகர நிர்வாகிகள் தங்கள் நகரங்களில் கழிவுகள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன மற்றும் அகற்றப்படுகின்றன என்பதைக் கண்காணிக்க அவர்களால் முடியவில்லை என்றும். அதுவே குடிமக்களால் குப்பைகள் தேவையற்ற இடங்களில் கொட்டப்பட்டு, அதன் மூலம் பொது சுகாதார சவால்கள் அதிகரிக்கிறது” என்று Recity Network செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு முதல், இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகளை சிறப்பாகக் கண்காணிக்கவும், நிர்வகிக்கவும் அதன் கழிவு நுண்ணறிவு தளத்தைப் பயன்படுத்தி, நகர அரசுகள் மற்றும் பெருநிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் நிறுவனம் தான் Recity Network.
Recity Networkன் கழிவு நுண்ணறிவு தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்திய நகரங்களில் கழிவுகளின் அளவு மற்றும் இயக்கம் பதிவு செய்யப்படுகிறது. இதனால் உயர்தர பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்களிடம் மறுசுழற்சி செய்வதற்காக திருப்பி விடப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்தியாவில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள மலை நகரமான முசோரியில் உள்ள குப்பைக் கிடங்கில் இருந்து கடந்த மூன்றாண்டுகளில் 7,040 மெட்ரிக் டன் கழிவுகள் திருப்பி விடப்பட்டுள்ளதாக Recity Network தெரிவித்துள்ளது.
மொத்தமாக Recity Network இந்தியாவில் உள்ள குப்பைக் கிடங்குகளில் இருந்து சுமார் 53,000 மெட்ரிக் டன் கழிவுகளைத் திருப்பிவிட்டு மிகசிறந்த சாதனையை செய்துள்ளது என்று அந்நிறுவனம் மதர்ஷிப்புடன் பகிர்ந்து கொண்டுள்ளது.
இந்த சூழலில் தற்போது சிங்கப்பூரின் DBS அறக்கட்டளை அளிக்கும் மானியம், Recity Networkன் அதன் தொழில்நுட்பத் திறன்களைக் மேன்படுத்தவும், கட்டமைக்கவும் உதவுள்ளது. அதே போல சிங்கப்பூர் DBS அறக்கட்டளையின் இந்த மானியம், தங்கள் செயல்திறனை மேன்படுத்தும் என்றும் இந்திய நகரங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க உதவும் என்றும் Recity Network தெரிவித்துள்ளது.