ஏர் இந்தியா விமான நிறுவனம், பயணிகள் விமானத்தில் பயணிக்கும் பொழுது எந்த வகையான பொருள்களை எடுத்து வர வேண்டும் மற்றும் எடுத்து வரக்கூடாது என்பதை பற்றி தெளிவான அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கையில் “எங்களுடன் பயணிக்கும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வது எங்கள் முன்னுரிமை. அபாயகரமான பொருட்கள் விமானத்தில் உள்ள அனைவருக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. உங்கள் கேபின் அல்லது செக்-இன் பைகளில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்” என்று கேட்டுக் கொண்டுள்ளது.
ஒழுங்குமுறை அதிகாரிகளின் வழிகாட்டுதல்களின்படி, பவர் பேங்க்கள் மற்றும் கையடக்க மொபைல் சார்ஜர்கள் போன்றவைகேபின்/ஹேண்ட் பேக்கேஜில் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.
மேலும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களான கொப்பரை (காய்ந்த தேங்காய்), இ-சிகரெட்டுகள், லைட்டர்கள், Thuraya அல்லது இரிடியம் செயற்கைக்கோள் தொலைபேசி போன்றவை கேபின் சாமான்கள் அல்லது சரிபார்க்கப்பட்ட சாமான்களில் அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, சாமான்களைத் திரையிடும் போது இவற்றில் ஏதேனும் ஒன்று கண்டறியப்பட்டால், அந்த பொருளானது சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பயணிகளிடமிருந்து உடனடியாக கைப்பற்றப்படும் எனவும் விமானத்தில் ஏற்றப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர கூர்மையான ஆயுதங்கள், லைட்டர்கள், கத்தரிக்கோள்கள், ஸ்போர்ட்ஸ் ஐட்டம்ஸ், கேஸ் அடைக்கப்பட்ட சாமான்கள் போன்றவற்றையும் எடுத்துச் செல்லக்கூடாது என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும் பேட்டரிகளை எடுத்துச் செல்லும் பொழுது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
பேட்டரிகளை எடுத்துச் செல்லும் பொழுது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள்:
- உங்கள் கை சாமான்களில் எலக்ட்ரானிக் சாதனத்திற்கான பேட்டரிகளை எடுத்துச் செல்லலாம்.
- கையடக்க மின்னணு சாதனங்களுக்கான உதிரி பேட்டரிகள் (அயன் செல்கள் அல்லது பேட்டரிகள் உட்பட) சரிபார்க்கப்பட்ட சாமான்களில் ( checked-in luggage) மட்டுமே எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
- லித்தியம் உலோக பேட்டரிகளுக்கு, லித்தியம் உள்ளடக்கம் 2 கிராமுக்கு மேல் இருக்கக்கூடாது.
- லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கு வாட்-மணிநேர மதிப்பீடு அதிகபட்சமாக 100 Wh ஆக இருக்க வேண்டும்.
- ஒரு பயணி அதிகபட்சம் 20 உதிரி பேட்டரிகள் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்.
இனி நீங்கள் சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க நேரிட்டால் இவற்றை எல்லாம் கவனத்தில் வைத்துக்கொண்டு பயணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.