TamilSaaga

சிங்கப்பூர்.. போதையில் வாகனம் ஓட்டிய நபர்.. 50 வெள்ளி லஞ்சம் கொடுக்க முயன்று 5000 வெள்ளி Fine பெற்ற இந்திய வம்சாவளி மலேசியர்

சிங்கப்பூரில் அதிக மதுபோதையில் வாகனம் ஓட்டிச் சென்ற ஒருவர் சாலையோரம் மயங்கி விழுந்துள்ளார். இதை கண்டு அருகில் இருந்த ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்

போலீசார் வந்து சோதனை செய்தபோது வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த பொழுது சாலையில் விழுந்த அந்த நபர் மது அருந்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் போலீசாரிடமிருந்து தப்பிக்க அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த நபர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டு அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று மே 11ஆம் தேதி இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் கிருஷ்ணராவ் நரசிம்ம நாயுடு என்பவருக்கு 5000 வெள்ளி அபராதமும் 30 மாதங்கள் அவர் வாகனங்களை ஓட்ட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அவர் மேற்குறிப்பிட்ட அந்த அபராதத்தை கட்ட தவறும் பட்சத்தில் அவருக்கு ஐந்து வார சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிங்கப்பூரில் தமிழக ஊழியர் “சிவசாமி மரணம்..” அஜாக்கிரதையாக செயல்பட்ட சக ஊழியருக்கு சிறை – உயிரின் மதிப்பு அறிந்து செயல்படுங்கள்

துணை அரசு வழக்கறிஞர் சுனில் நாயர் கூறுகையில், குற்றவாளி கிருஷ்ணா, Ayer Rajah எக்ஸ்பிரஸ்வேயில் இருந்து பயோனியர் ரோடு ரவுண்டானா வழியாக சவாரி செய்து கொண்டிருந்தபோது, ​​வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் அவர் கீழே விழுந்தார் என்று கூறினார்.

உடனே அருகில் இருந்த ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் கீழே விழுந்து இருந்த கிருஷ்ணாவை மீட்க சென்ற போதுதான் அவர் மது அருந்தி இருப்பதை உறுதி செய்துள்ளார். அதன் பிறகு வந்த போலீசாரும் அதனை உறுதி செய்துள்ளனர்.

அப்பொழுது அங்கிருந்த போலீஸாருக்கு ஐம்பது வெள்ளி லஞ்சம் கொடுக்க முயன்று தற்பொழுது 5,000 வெள்ளி அபராதம் பெற்று சென்றுள்ளார் கிருஷ்ணா அவர்கள்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts