சிங்கப்பூரில் வயதில் முதியவர்களுக்கு கொரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் என்று MOH தெரிவித்துள்ளது.
மேலும் வயதில் முதியவர்கள் தங்களை காத்துக்கொள்ள விரைவாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது.
முதியவர்கள் எந்த ஒரு தடுப்பூசி மையத்திற்கும் சென்று அதனை செலுத்திக்கொள்ளலாம் அல்லது தடுப்பூசிக்கான இணையதளத்தில் பதிவு செய்து போட்டுக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் முதல் டோஸ் மட்டும் செலுத்திக்கொண்ட மக்கள் விரைவாக தங்களது இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் அது பாதுகாப்பை அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கே முதலில் தடுப்பூசி திட்டம் துவங்கப்பட்டது ஆனால் பெரும்பான்மை சதவீத மக்கள் இன்னும் செலுத்திக்கொள்ளவில்லை என MOH தெரிவித்துள்ளது.