TamilSaaga

“சிங்கப்பூரின் “Tech Pass” திட்டம்” : இதுவரை வெளிநாட்டினருக்கு 150 பணி அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன

சிங்கப்பூரில் ஜனவரி நடுப்பகுதியில் டெக்.பாஸ் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து தொழில்நுட்பத் துறையில் வெளிநாட்டினருக்கான 150 பணி அனுமதிச் சீட்டுகள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஜூலையில் அறிவிக்கப்பட்ட 90 ஒப்புதல்கள் மற்றும் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட 22 ஒப்புதல்களில் இருந்து பெரிய முன்னேற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான தகவலின் படி சிங்கப்பூர் அதன் உயர்-சாத்தியமான தொழில்நுட்ப சூழலை மேம்படுத்தும் முயற்சியில், தொழில் தொடங்க, கார்ப்பரேட் குழுக்களை வழிநடத்த அல்லது இங்கு கற்பிக்க விரும்பும் உயர்மட்ட வெளிநாட்டு வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களுக்கு அடுத்த ஆண்டு புதிய பணி அனுமதிச் சீட்டு அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியது.

ஈ-காமர்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற துறைகளில் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களை ஈர்க்கும் வகையில், சிங்கப்பூரை உலகப் பந்தயத்தில் முன்னிலைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள டெக்.பாஸைத் தொடங்குவதற்கான திட்டங்களைப் பொருளாதார மேம்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. Tech.Pass ஆனது இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தல் சில நிபந்தனைகளின் அடிப்படையில் இருக்கும். பாஸிற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 2021ல் தொடங்கும், மேலும் பாஸ் வழங்கல் தொடங்கப்பட்டவுடன் 500 இடங்கள் கிடைக்கும் என்றும் அறிவிப்பு வெளியானது.

சிங்கப்பூரில் இத்தகைய நிபுணர்கள் இருப்பதால், அவர்கள் தங்கள் மூலதனம், நெட்வொர்க்குகள் மற்றும் நாட்டின் தொழில்நுட்ப சூழலுக்கு அறிவை கொண்டு வர முடியும் என்றும் அது சிங்கப்பூரர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சான் சுன் சிங் அப்போது கூறினார்.

Related posts