TamilSaaga

சிங்கப்பூரில் திக்குத் தெரியாமல் தவித்த நாட்கள்.. “அள்ளிக் கொடுத்து” காப்பாற்றிய பெண் – 11 வருடங்கள் கழித்து தேடும் வெளிநாட்டு ஊழியர்

உண்மையில் இது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் தான். நமது சிங்கப்பூர் மனிதர்களை கொண்டிருக்கிறது இந்த செய்தியும் ஒரு உதாரணமே!

கடந்த 2006ம் ஆண்டு சிங்கப்பூருக்கு தனது மனைவியுடன் சீனாவில் இருந்த வந்தவர் Fan Zhong Hua.

அப்போது இவர் பகுதி நேரமாக சிங்கப்பூரில் வேலை செய்து படித்து வந்தார். பகலில், அவர் துவாஸில் அமைந்துள்ள ஒரு கப்பல் கட்டும் தளத்தில் பணிபுரிய, மாலையில், இரவு நேர பள்ளிக்கு செல்வது வழக்கம்.

Fan Zhong Hua தங்கியிருந்த Dormitory-யில், கிளார்க்காக பணிபுரிந்தவர் Li Jie. 1961ம் ஆண்டு பிறந்தவர் லி. அப்படியெனில், அவருக்கு வயது 61.

Fan Zhong குடும்பத்துடன் நெருங்கிப் பழகிய Li, அந்த இளம் தம்பதிகளுக்கு நிறைய உதவிகளை செய்திருக்கிறார். காரணம், Li திருமணம் செய்து கொள்ளாதவர். Woodlands பகுதியில் தனியாகவே வசித்து வந்தவர்.

இதனால், Fan Zhong-ஐ தனது மகனாக பார்த்தாரா என்னவோ, எப்போதும் அவர்களுக்கு சின்ன சின்ன உதவிகள் செய்து வந்திருக்கிறார். அடிக்கடி ஸ்நாக்ஸ் வாங்கிக் கொடுப்பது, ஹோட்டலில் உணவருந்த வெளியே அழைத்துச் செல்வது, பண்டிகைக் காலங்களில் red packets பெற்றுத் தருவது என்று தனது அன்பை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தி வந்திருக்கிறார்.

எல்லாம் ஓரளவுக்கு நன்றாக சென்றுக் கொண்டிருக்க, 2011ம் ஆண்டு Fan Zhong நிதிச் சுமையில் சிக்கியிருக்கிறார். ஏனெனில், அவர் வேலை செய்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால் சரியான ஊதியம் கிடைக்காமல் Fan Zhong மற்றும் அவரது மனைவி கஷ்டப்பட்டிருக்கின்றனர்.

Fan Zhong-ன் கல்விக் கட்டணம், வாடகை பணம் என்று எதற்கும் அவர்களால் கட்டணம் செலுத்த முடியவில்லை.

மேலும் படிக்க – நாம் அண்ணாந்து பார்க்கும் சிங்கப்பூரில்.. இப்படியும் சாபம் பெற்ற ஒரு கிராமம்.. 50 வருடங்களாக தூக்கத்தை இழந்து நிற்கும் துயரம்!

இந்த நிலையில் தான், Fan Zhong நிதிச் சுமையால் கஷ்டப்படுவது Li-க்கு தெரிய வந்திருக்கிறது. சற்றும் தாமதிக்காமல் 1000 சிங்கப்பூர் டாலர் பணத்தை எடுத்துக் கொடுக்க, அந்த பணத்தைக் கொண்டு தங்கள் சிக்கலில் இருந்து தம்பதிகள் மெல்ல மெல்ல மீண்டு வந்தனர். அதுமட்டுமின்றி, அதன் பிறகு ஒருமுறை கூட அவர் பணத்தை திரும்பக் கேட்கவில்லை.

அதன் பிறகு நாட்கள் கழிந்தாலும், Fan Zhong ஓரளவுக்கு மீண்டு வந்தாலும், 1000 சிங்கப்பூர் டாலரை திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு அவருக்கு வருமானம் இல்லை. எனினும், மனம் கேட்காத Fan Zhong, ‘உங்கள் பணத்தை நிச்சயம் திரும்பக் கொடுத்து விடுகிறேன்” என்று சொல்ல, அதற்கு லி “அந்த பணத்தை உங்கள் திருமண பரிசாக நான் கொடுத்ததாக வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூற, Zhong நெகிழ்ந்து போய்விட்டார்.

அதன் பிறகு, 2012ம் ஆண்டு மீண்டும் Fan Zhong தனது மனைவியுடன் சீனா திரும்பிவிட்டார். 2015 வரை மொபைல் ஃபோன் வழியாக லீயுடன் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். இந்த சூழலில் தனிமையில் இருந்த லீயின் மொபைல் காணாமல் போக, தொடர்பும் அத்தோடு அறுந்து போனது.

கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்து, அதாவது கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் மீண்டும் சிங்கப்பூர் வந்த Fan Zhong, எவ்வளவோ தேடியும் லீயை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது அவர் நன்றாக சம்பாதிப்பதால் லீயிடம் அந்த 1000 டாலரை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைப்போடு தான் சிங்கப்பூர் வந்தார்.

ஆனால், லீ அவர் வசித்த இடத்தில் இப்போது இல்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா? என்பது கூட தெரியவில்லை. இதுகுறித்து வேதனையுடன் பேசிய Zhong, “நான் 11 வருடங்களுக்கு முன்பு வாங்கிய 1000 டாலர் பணத்தை திருப்பிக் கொடுத்து நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்து தான் சிங்கப்பூர் வந்தேன். ஆனால், இப்போது நான் அவர் பார்த்தாலே போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டேன். அவரை காணாமல் தொடர்ந்து தேடி வருகிறேன்.

அவரை கண்டுபிடித்தால், அவர் காலில் விழுந்து வணங்க காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறும் Zhong, சிங்கப்பூரில் யாராவது லீயை கண்டறிந்தால், 8288 8223 என்ற எண்ணுக்கு உடனே அழைத்து தகவல் தெரிவியுங்கள் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts