சிங்கப்பூரில் Bishan பகுதியில் 73 வயது முதியவரைக் கொன்றதாக 49 வயது பணிப்பெண் மீது இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 30) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. Sumiyati என்ற அந்த பெண் காவலில் இருந்தபடியே வீடியோ இணைப்பு மூலம் மாநில நீதிமன்றங்களில் ஆஜராகினார்.
இந்தோனேசியா மொழிபெயர்ப்பாளர் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றினார் அந்த பெண். தற்போது அவர் மனநல கண்காணிப்பிற்காக ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த மாதம் அவர் மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது. சுமியதி நீதிமன்ற அமர்வின்போது எந்தவித கேள்வியும் கேட்கவில்லை என்றும், நீதிமன்ற கேள்விகளின்போது தன் தலையை மட்டுமே அசைத்ததாக கூறப்படுகிறது.
கடந்த வியாழன் அன்று இரவு 8.50 மணியளவில் பிஷன் தெரு 23ல் உள்ள ஒரு குடியிருப்பு பிரிவில், ஒருவர் இறந்து கிடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது அந்த நபர் உள்ளே அசையாமல் கிடந்ததை அதிகாரிகள் கண்டதாக கூறினார்.
மேலும் அங்கு வரவழைக்கப்பட்ட ஒரு துணை மருத்துவர் அவரை பரிசோதித்துப்பார்த்ததில் அவர் இறந்து விட்டதாகவும் அறிவித்தார். இந்த நிகழ்வு குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த வீட்டில் இருந்த வெளிநாட்டு பணிப்பெண்ணை கைது செய்தனர்.
இறந்தவரின் வீட்டில் பணிபுரியும் அந்த பணிப்பெண் நாளை சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரிக் வெளிநாட்டு பணிப்பெண் ஒருவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.